Friday, April 25, 2014

Google Adwords Activated Acoounts & Ads Offer

I am Providing Google Adwords Activated Accounts for any country with 5000 INR budget on very affordable cost.
it will work with any country and you can run your ads .
 
It will be fully working and active adwords account with Indian billing and with payment.
 
More details you could email me at ceo@speakmeme.com skype id speakmeme or visit www.choicedelhi.in

Friday, April 11, 2014

Bing Promotional Code - Bing Vouchers Worth 1000$ For Sale

DLL Incorporation is offering Bing Promotional Codes of 1000$ for its customers.

You can advertise your business at Bing and Yahoo networks and search engines  with the help of these vouchers and you can save a lot of money.

These are 100% working and official vouchers which you can redeem you can same bing ad accounts. it works in old and new both kind of Bing Accounts.

This is limited offer from Bing team. to avail this offer you may contact DLL Incorporation at below destinations :-

Email id  - ceo@speakmeme.com
Skype id - speakmeme
Cell # -  +91-8586875020

or you can know our more offers at www.choicedelhi.in

Thursday, April 10, 2014

Bing Coupon 1000$ and Facebook Coupon For Sale

choicedelhi.in is providing Bing Coupons of 100$ and 500$ on very affordable price. This will work in new and old Bing accounts it will work worldwide in any billing.

We also provides Facebook 50$ vouchers on very affordable cost.

It is set of coupons which you can use in same Bing account successfully.  You can pay us with perfectmoney, webmoney, skrill or neteller. instant delivery.

More details call us at +91-8586875020 or 9136075049 . 
Skype id speakmeme


Wednesday, May 15, 2013

Niyaz Agamadou Shahaboudine added you to his circles and invited you to join Google+

Niyaz Agamadou Shahaboudine added you to his circles and invited you to join Google+.
Join Google+
Google+ makes sharing on the web more like sharing in real life.
Circles
An easy way to share some things with uni friends, others with your parents and almost nothing with your boss. Just like in real life.
Hangouts
Conversations are better face to face. Join a video Hangout from your computer or mobile phone to catch up, watch YouTube videos together or swap stories with up to 9 of your friends at once.
Mobile
Lightning-fast group chat. Photos that upload themselves. A bird's-eye view of what's happening nearby. We built Google+ with mobile in mind.
You have received this message because Niyaz Agamadou Shahaboudine invited niax_2005.220445@blogger.com to join Google+. Unsubscribe from these emails.
Google Inc., 1600 Amphitheatre Pkwy, Mountain View, CA 94043 USA

Sunday, May 20, 2012

அல்-ஹதீஸ் / நபி மொழிகள்

'அல்-ஹதீஸ்" என்பது அண்ணல் (நபி) அவர்கள் சொன்னவை (கவ்லீ), செய்தவை (பிஃலீ), அங்கீகரித்தவை (தக்ரீரி)இவை அனைத்தும் ஹதீஸ் எனப்படும். இது திருக்குர் ஆனுக்கும் ஒரு விளக்கமாக அமைந்துள்ளது. இறை வேதத்துக்கு அடுத்தபடியாக கொள்ளத்தக்கது இதுவேயாகும்.

ஹதீஸ் இரு வகைப்படும். அவை:

1. ஹதீஸ் குத்ஸீ: இறைவனின் கருத்தை ஜிப்ரீல் (அலை) தம் சொல்லால் அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் கூறியதாகும்.
2. ஹதீஸ் நபவீ: அண்ணல் நபி அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் அனைத்தும் ஹதீஸ் நபவீ என்றும் (ஹதீஸ் கைர குத்ஸீ என்றும்) வழங்கப்படும்.

முதலில் ஹதீஸ்கள் ஏன் நூல் வடிவில் தொகுக்கப்படவில்லை?

இறைவசனற்களோடு நபிமொழிகள் ஒன்றறக் கலந்து விடக்கூடாது என்பதற்காகவும், எல்லாப் பிரச்சனைகளுக்கும் பரிகாரம் கூறக்கூடிய அல்லாஹ்வின் திருத்தூதர் மக்களின் மத்தியில் வாழ்ந்து கொண்டிருந்ததாலும், ஆயிரக்கணக்கான மக்களின் உள்ளங்களில் பதிந்திருந்தாலும் ஆரம்பகாலத்தில் ஹதீஸ்கள் நூல்வடிவில் தொகுக்கப்படவேண்டிய அவசியம் ஏற்படவில்லை.

பின்னர் தொகுக்கப்பட வேண்டிய அவசியம் என்ன?

நபிகள் நாயகத்தின் மறைவிற்க்குப் பிறகு இலட்சக்கணக்கான ஹதீஸ்களை மனனம் செய்த நாயகத்தோழர்கள் மார்க்கப்பிரச்சாரத்திற்காக பல்வேறு நாடுகளுக்குப் பயணமாகிக் கெண்டிருந்தார்கள். பலர் இஸ்லாமியப் போர்களில் கலந்து கொண்டு இறப்பெய்திக் கொண்டுமிருந்தார்கள். அதனால் நபிமொழிகள் தொகுக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

"நான் சொல்லாதவற்றை சொன்னதாக யார் சொல்கிறார்களோ அவர்கள் தங்கள் இருப்பிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும்." என்ற நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையால் அபூபக்கரு (ரலி), உமர் (ரலி) போன்ற ஸஹாபாக்கள் ஹதீஸ்களை தொகுக்கும் முயற்சியில் முனையவில்லை. பின்னர் இதன் தேவை உணரப்பட்டதும் பல நல்லோர் இதனை தொகுப்பதில் முயற்ச்சிகளை மேற்கொண்டனர்.

இத்துறையில் முதன் முதலில் கவனம் செலுத்தி ஆவனை செய்தவர் இரண்டாவத உமர் என அழைக்கப்படும் கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ்(ரஹ்) ஆவார்.

ஹிஜ்ரி 100 முதல் 200 வரை ஹதீஸ் நூல்கள் 

கலீபா உமர் இப்னு அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்களின் ஆணைப்படி அன்று மதீனாவின் கவர்னராக இருந்த ஆபூபக்கர் இப்னு ஹஸம் (ரஹ்) அப்பணியை மேற்கொண்டனர். இமாம்களான இப்னு இஸ்ஹாக், இப்னு ஜூரைஜ், ஸூஃப்யானுத் தவ்ரீ, அப்துல்லாஹ் இப்னு முபாரக், இப்னு ஜரீர் அத்தபரீ, அவ்ஸாயீ, ஹம்மாத், அஸ்ஸூஹ்ரீ, போன்றோர் அப்பணியில் ஈடுபட்டு ஹிஜ்ரி 100 முதல் 200 வறை சிறிதும் பெரிதுமாக சுமார் 20 ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர்.

அதன் பிறகு இமாம் மாலிக், இமாம் ஷாபியீ, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல்,ஆகியோர் முறையே முவத்தா, முஸ்னத் ஷாஃபியீ, முஸ்னத் அஹ்மத் போன்ற ஆதாரபூர்வமான ஹதீஸ் நூல்களைத் தொகுத்தனர்

பொற்காலமும் ஆறு திரட்டுகளும்

அதன் பிறகு ஸிஹாஹ் ஸித்தா என்னும் ஆறு திரட்டுகளை உருவாக்கிய இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், இமாம் அபூ தாவூது, இமாம் திர்மிதீ, இமாம் நஸயீ, இமாம் இப்னு மாஜா ஆகியோர் இப் பெரும் பணியில் ஈடுபட்டனர். இவர்களின் காலமே ஹதீஸ் கலையின் பொற்காலமாகும்.

அரசியல் காரணங்களுக்காகவும், இஸ்லாத்திற்கு ஊறுவிளைவிக்க வேண்டுமென்ற குரோத நோக்கத்துடனும் பல்லாயிரக்கணக்கான பொய்யான ஹதீஸ்களை புனைந்து உண்மையான ஹதீஸ்களுடன் கலந்துவிடப்பட்டி ருந்ததால் பொய்யான ஹதீஸ்களில் இருந்து உண்மையான ஹதீஸூகளை தரம் பிரிப்பது இவர்களுக்கு மிகவும் கடினமான வேலையாக இருந்தது.

நம் முன்னோர்கள் ஹதீஸ்களை ஒருவரிடம் கேட்டார்கள், உடனே எழுதிவைத்துவிட்டுப் போய்விட்டார்கள் என்ற அளவில் ஹதீஸ்கள் தொகுக்கப்படவில்லை.

உதாரணமாக: நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாக கேட்டவர் யார்? அவரிடம் கேட்டவர் யார்? என்று கடைசிவரை அறிவித்தவர் யார்? அவர்களின் நினைவாற்றல், நல்லொழுக்கம், பிறப்பு, இறப்பு, வரலாறு ஆகியவற்றை ஐயமறத் தெரிந்து தெளிந்து தேர்ந்த பின்னரே ஒரு ஹதீஸை தேர்ந்தெடுக்கப்படும்.
இவ்வாறு பல்லாண்டுகள் ஆயிரக்கணக்கான மைல்கள் கால்நடையாகப் பயணம் செய்து பல இலட்சம் ஹதீஸ்களை சேகரித்து தங்களின் கடினமான விதிகளால் அவற்றிலிருந்து சில ஆயிரம் ஹதீஸ்களை தேர்வு செய்தனர்.

இமாம் தேர்வு செய்த ஹதீஸ்கள்
(வாழ்ந்த ஹிஜ்ரி ஆண்டு திரட்டியவை தேர்ந்தவை)

01. ஸஹீஹூல் புஹாரி.இமாம் முஹம்மது இஸ்மாயீல் புஹாரி(ரஹ்) 194-256 . திரட்டியவை – 600,000. தேர்ந்தவை-7563 ஹதீஸ்கள்.
02. ஸஹீஹ் முஸ்லிம்.இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்) 204-261 திரட்டியவை-300,000 . தேர்ந்தவை-7563 ஹதீஸ்கள்.
03 ஸூனனு அபீதாவூது. இமாம் அபூ தாவூது சுலைமான் அஸ்ஸஜஸ்தானீ 202-275. திரட்டியவை-500,000 . தேர்ந்தவை-5274 ஹதீஸ்கள்.
04 ஜாமிவுத் திர்மிதீ. இமாம் அபூஈஸா முஹம்மது இப்னு ஈஸா திர்மிதீ(ரஹ்) 200-279 . தேர்நதவை- 3956 ஹதீஸ்கள்.
05 ஸூனனுந் நஸாயீ. இமாம் அபூ அப்துர்ரஹ்மான் அந்நஸாயீ 215-303 . தேர்ந்தவை-5761 ஹதீஸ்கள்.
06 ஸீனனு இப்னுமாஜா இமாம் அபூ அப்துல்லாஹ் முஹம்மது இப்னு யாசீர் 209-273. – தேர்ந்தவை-4341 ஹதீஸ்கள்.

(ஸிஹாஹ் ஸித்தாவின் மொத்த ஹதீஸ்கள் – 34,458 ஹதிஸ்கள்)

இவையடுத்து முக்கிய இடம் பெறுவது-

முஸ்னது அஹ்மது : இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் (ரஹ்) 164-241 திரட்டியவை-1000000 . தேர்ந்தவை-27,999 ஹதீஸ்கள். அதிகமான ஹதிஸ்கள் இடம் பெற்ற ஹதீஸ் நூல் என்ற பெருமையைப் பெறவது முஸ்னது அஹ்மது என்ற நூல் தான்.

இவர்களை அடுத்து இமாம்கள் தஹாவீ, தாரகுத்னீ, தப்ரானி, பைஹகீ ஹாக்கிம், இப்னு ஹிப்பான், இப்னு குஸைமா, இப்னு அவானா, இப்னு ஜக்கன் ஆகியோரும் ஹதீஸ்களைத் திரட்டுவதில் பெரும் பாடுபட்டனர்.

ஹதீஸ்கள் மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன

1. ஸஹீஹ்: உண்மையானது (ஹதீஸின் உண்மைத்தன்மைப்பற்றி
ஏகோபித்த அபிப்பிராயத்தைபெற்றவை)
2. ளயீஃப் : பலகினமானது (ஒரு ஹதீஸின் கருத்து பற்றியோ, அதை
அறிவிப்பவர் தகுதி பற்றியோ ஐயம் ஏற்படின் அது ளயீஃப் எனப்படும்)
3. மவ்லூஃ: பொய்யானது (புனையப்பட்டது)

இவைதவிர, முதவாதிரா, மஷ்ஹூரா, ஆஹாத் எனவும் அறிவிப்பாளர்களின் தொடர் வரிசை மூன்று வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன.

ஸஹாபாக்களில் ஒரு ஹதீஸிலிருந்து 1000க்கு மேற்பட்ட ஹதீஸ்கள் வரை அறிவித்தவர்கள் 1300 பேர்கள். ஒரேயோரு ஹதீஸை வெளிபடுத்தியவர்கள் 500 பேர்கள். இவர்களில் முதலிடம் பெற்று அதிகமான ஹதீஸ்களை அறிவித்த பெருமை ஹல்ரத் அபூ ஹூரைரா (ரலி) அவர்களையே சாரும்.

1000 ஹதீஸ்களுக்கு மேல் அறிவித்தவர்கள் 07 பேர்
(ஹதீஸ் அறிவிப்பாளர்களும் ஹதீஸ்களின் எண்ணிக்கையும்)

01 ஹல்ரத் அபூ ஹூரைரா (ரலி), 5374 ஹதீஸ்கள்.
02 ஹல்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி), 630 " 
03 ஹல்ரத் அனஸ் இப்னு மாலிக் (ரலி), 2286 "
04 ஹல்ரத் ஆயிஷ்ா ஸித்தீக்கா (ரலி) , 2210 "
05 ஹல்ரத் அப்துல்லா இப்னு அப்பாஸ் (ரலி), 1660 "
06 ஹல்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி), 1540 "
07 ஹல்ரத் அபூ ஸயீதுல் குத்ரீ (ரலி) , 1170 ஹதீஸ்கள்.

1000 ஹதீஸ்களுக்கு குறைவாக அறிவித்தவர்கள்

(ஹதீஸ் அறிவிப்பாளர்களும் ஹதீஸ்களின் எண்ணிக்கையும்)

01 ஹல்ரத் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரலி), 848 ஹதீஸ்கள்.
02 ஹல்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ருப்னுல்ஆஸ்(ரலி) 700 "
03 ஹல்ரத் உமர் இப்னு கத்தாப்(ரலி), 537 "
04 ஹல்ரத் அலீ இப்னு அபீதாலிப் (ரலி, 536 "
05 ஹல்ரத் அபூதர்ருல் கிஃபாரி(ரலி), 281 "
06 ஹல்ரத் ஸஃது இப்னு அபீ வக்காஸ்(ரலி), 270 "
07 ஹல்ரத் முஆது இப்னு ஜபல்(ரலி) 200 "
08 ஹல்ரத் அபூதர்தாஃ(ரலி), 179 "
09 ஹல்ரத் உத்மான் இப்னு அஃப்ஃபான்(ரலி), 147 "
10 ஹல்ரத் அபூபக்கர்(ரலி) 142 "

தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
(ஹதீஸ் அறிவிப்பாளர்களும் பிறப்பு இறப்பு ஆண்டும்)

01 ஹல்ரத் ஸயீது இப்னுல் முஸய்யப் (ரஹ்) (ஹி 94)
02 ஹல்ரத் நாஃபிஃ மௌலா இப்னு உமர்(ரஹ்) (ஹி-117)
03 ஹல்ரத் முஹம்மது இப்னு ஸீரீன்(ரஹ்) (ஹி-110)
04 ஹல்ரத் இப்னு ஷிஹாபுஸ் ஸூஹ்ரி (ரஹ்) (ஹி-123)
05 ஹல்ரத் ஸயீது இப்னு ஜூபைர்(ரஹ்) (ஹி95)
06 ஹல்ரத் இமாம் அபூ ஹனீபா(ரஹ்) (ஹி270-55)

தாபிஉத் தாபியீன்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
(ஹதீஸ் அறிவிப்பாளர்களும் பிறப்பு இறப்பு ஆண்டும்)

01 ஹல்ரத் இமாம் மாலிக் இப்னு அனஸ்(ரஹ்) ( 93-179)
2 ஹல்ரத் இமாம் ஷாபியீ(ரஹ்) (ஹி 150-204)
03 ஹல்ரத் இமாம் ஸூஃப்யானுத்தவ்ரீ;(ரஹ்) (ஹி161)
04 ஹல்ரத் இமாம் ஸூஃப்யானுப்னு உயைனா (ரஹ்) ((ஹி198)
05 ஹல்ரத் இமாம் அல்லைத் இப்னு ஸஃது(ரஹ்) (ஹி 94-175)

ஸஹாபிய்யா பெண்களில் ஹதீஸ்கள் அறிவித்தவர்கள்
அ. (ஹதீஸ் அறிவிப்பாளர்களில் பெருமானாரின் மனைவியர்)

01 ஹல்ரத் அன்னை ஆயிஷா(ரலி) 2210 ஹதீஸ்கள்
02ஹல்ரத் அன்னை உம்மு ஸலமா(ரலி) 387 "
03 ஹல்ரத் அன்னை உம்மு ஹபீபா(ரலி) 65 "
04 ஹல்ரத் அன்னை ஹப்ஸா(ரலி) 60 "
05 ஹல்ரத் அன்னை மைமூனா(ரலி) 46 "
06 ஹல்ரத் அன்னை ஜைனப் பின்த் ஜக்ஷ்(ரலி) 11 "
07 ஹல்ரத் அன்னை ஸஃபிய்யா(ரலி) 10 "
08 ஹல்ரத் அன்னை ஸவ்தா(ரலி) 5 "

ஆ. ஏனையத்தோழியர்

09 ஹல்ரத் அஸ்மா பின்த் யஸீத்(ரலி) 81 "
10 ஹல்ரத் அஸ்மா பின்த் அபீபக்கர்(ரலி) 58 "
11 ஹல்ரத் ஃபாத்திமா பின்த் அஸத்(அலியின் தாயார்) (ரலி) 46 "
12 ஹல்ரத் உம்முஹானி பின்த் அபீ தாலிப்(ரலி) 46 "
13 ஹல்ரத் உம்மு ஃபள்ல் (அப்பாஸ் (ரலி) மனைவி) (ரலி) 30 "
14 ஹல்ரத் அர்ருபைஃ பின்த் முஅவ்வத்(ரலி) 21 "
15 ஹல்ரத் கவ்லா பின்த் ஹக்கீம்(ரலி) 15
16 ஹல்ரத் உம்மு ஸூலைம் (அனஸ் (ரலி) தாயார்)(ரலி) 14 "
17 ஹல்ரத் புஸ்ரா பின்த் ஸஃ;ப்வான்(ரலி) 11 "
18 ஹல்ரத் ஸைனப் பின்த் அபீ ஸலமா(ரலி) 7 "
19 ஹல்ரத் உம்முல் அலா அல் அன்ஸாரியா(ரலி) 6 "

இ.மற்றும் சிலர்

21 உம்முல் ஹக்கம் பின்த் அபீஸூஃப்யான்(ரலி)
22 அஷ்ஷிஃபா பின்த் அப்துல்லாஹ்(ரலி)
23 உம்மு குல்தூம் பின்த் அபீபக்கர்(ரலி)
24 ஹிந்து பின்த்உத்பா இப்னு ரபீஆ(ரலி)
25 உமைமா பின்த் ரக்கீகா(ரலி)
26 பாத்திமா பின்த் ஹூஸைன்(ரலி)

இன்னும் ஏராளமானோர் நபி மொழிகளை அறிவித்துள்ளனர்.

பின் வரும் நபிமணியின் எச்சரிக்கையின் விளைவால் எழுந்த அச்சத்தினால் பலர் ஹதீஸ்களை தொகுப்பதையும் அறிவிப்பதையும் தவிர்த்தனர். நபிகள் நாயகம் கூறினார்கள்: 'என்னைபற்றி நான் கூறியதாக யார் பொய்யுரைக்கிறானோ அவன் தன் இருப்பிடத்தை நரகமாக்கிக்கொள்ளட்டும்.(அவன் போய் சேரும் இடம் நரகமாகும்)'

-Najumudin Habeeb 
---------------------
Parangi Pettai
Khaleel Baaqavee
Kuwait

__._,_.___
Recent Activity:
*** [K-Tic] Kuwait Tamil Islamic Committee, Kuwait ***
.

__,_._,___

Tuesday, May 15, 2012

பன்றிக் கொழுப்பு.. உஷார்..

கடந்த மாதத்தில் இணையத்தில் தமிழ் சகோதரர்களுக்கு மத்தியில் உலா வந்த மின்னஞ்சல் செய்தி சற்று அதிர்ச்சியளிக்கு முகமாகவே இருந்தது. அந்த மின்னஞ்சலில் குறிப்பிட்டிருந்த செய்தி:

அதாவது ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை பிரான்ஸ் நாட்டின் உணவு தரக்கட்டுப்பாடு மையம் அங்கீகாரம் அளித்தபின் மட்டுமே விற்பனைக்காக வெளிவரும். உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தில் உணவுப்பொருட்களை பிரித்து அதன் கலவையை (ingredients) ஆய்வு செய்வார்கள். இந்த கலவைகள் சிலவற்றிற்கு அறிவியல் பெயர்களும் இருக்கும், சிலவற்றிற்கு குறியீட்டுப் பெயர்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக E-904, E-141 என்று.

இவ்வாறு சோதனை செய்து கொண்டிருந்த ஷேக் சாஹிப் சில கலவைகளைக் (ingredients) குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கேட்டபோது "உங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்யுங்கள், எந்தவித கேள்விகளும் கேட்கவேண்டாம்" என்ற பதில்தான் வந்தது. இவர்களின் இந்த பதில் ஷேக் சாஹிப்பின் சிந்தையில் மேலும் சந்தேகங்களை எழுப்பியது. அதற்கடுத்து அவர்களின் கோப்புகளை ஆய்ந்து பார்க்கும் போது உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் அதிர்ச்சியூட்டும் தகவல்களை கிடைக்கப்பெற்றுத் திகைத்தார்.

சற்றேறக்குறைய எல்லா மேற்கத்திய நாடுகள் மற்றும் ஐரோப்பாவிலும் முதலாம் வகை மாமிசமாக உணவுக்குத் தேர்ந்தெடுப்பது பன்றியே ஆகும். எனவேதான் பலவகை பன்றிகளை உற்பத்தி செய்யும் பன்றிப் பண்ணைகள் அதிகமாக அந்நாடுகளில் உள்ளன. பிரான்ஸில் மட்டும் இதுபோன்ற பன்றிப் பண்ணைகள் 42,000 ஆயிரத்துக்கும் மேல் உள்ளன. ஏனைய விலங்கினங்களைக் காட்டிலும் பன்றியின் மாமிசத்தில் அதிகமான கொழுப்பு உள்ளது. ஐரோப்பியர்களும், அமெரிக்கர்களும் அதிகப்படியான கொழுப்பைத் தவிர்க்கவே முயற்சி செய்கின்றனர்.

இந்நிலையில் பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்பு எங்கே செல்கிறது என்பதுதான் கேள்வி?

உணவுத் தரக்கட்டுப்பாடு மையத்தின் மேற்பார்வையில்தான் எல்லாப் பன்றிகளும் அறுக்கும் கொட்டில்களில் அறுக்கப்படுகின்றன. அறுத்த பன்றிகளிலிருந்து நீக்கிய பெரும்பான்மையான கொழுப்பை எவ்வாறு அப்புறப்படுத்துவது என்பதுதான் இவர்களுக்குத் தலைவலி. ஆரம்ப காலத்தில் முறையாக இதை எரித்துவிடுவார்கள்.

இவர்கள் பன்றிக் கொழுப்பை எரிப்பதால் எவ்வித பயன்பாடும் இல்லை. எனவே இதை எவ்வாறு பயன்படுத்தலாம் என எண்ணத்தொடங்கினர். பன்றிகளிலிருந்து நீக்கப்பட்ட கொழுப்புகளைக் கொண்டு முதல்கட்டச் சோதனையாக சோப்புகளைத் தயார் செய்து பார்த்தனர். இவர்களின் இந்த முயற்சி பலன் கொடுத்தது. அதற்கடுத்த கட்டமாக முழுவீச்சில் இந்த பன்றிக் கொழுப்பை பல வேதியியல் நொதிப்பொருட்களைக் கொண்டு அமிலங்களாக மாற்றி விற்பனைக்கு இறக்கி விட்டனர்.

பல்வேறு காரணங்களுக்காக உற்பத்தி நிறுவனங்கள் பெரும்பாலும் இதை வாங்கத் துவங்கினர். அவ்வேளையில் ஐரோப்பாவில் உணவுப் பொருட்களுக்கான சட்டம் கொண்டுவரப்பட்டது. எல்லா உற்பத்தி நிறுவனங்களும் அவை உற்பத்தி செய்யும் உணவுப் பொருட்கள், காஸ்மெடிக் பொருட்கள் (சோப்பு, ஷாம்பூ, முகக் கிரிம், ஹேர் கிரிம்..) மற்றும் மருந்துப் பொருட்களின் அட்டையில் அவற்றில் கலந்துள்ள கலவைகளை (ingredients) கண்டிப்பாக குறிப்பிடவேண்டும் என்று. இதனால் பன்றிக் கொழுப்பு கலந்துள்ள பொருட்களில் இதை பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்றே குறிப்பிட்டு வெளியிட்டுக்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இஸ்லாமிய நாடுகளில் இதுபோன்ற பன்றிக் கொழுப்பு சேர்க்கப்பட்ட பொருட்களுக்கு தடைவிதிக்கப்பட்டது. இத்தடையின் விளைவாக பன்றிக் கொழுப்பைச் சேர்த்துள்ள பொருட்களின் விற்பனையில் பின்னடைவு ஏற்பட்டது.

பன்றிக் கொழுப்பு என்று எழுதியிருந்தாலும் ஐரோப்பியர்களால் அப்பொருட்கள் விரும்பி வாங்கப்பட்டே வந்தன. இஸ்லாமிய நாடுகளிலும், முஸ்லிம்களாலும் இவ்வாறான உற்பத்திப் பொருட்கள் புறக்கணிக்கப்படுவதால் பன்றிக் கொழுப்பு (Pig Fat) என்று எழுதுவதற்கு பதிலாக விலங்குகள் கொழுப்பு (Animals Fat) என்று எழுதினர். அப்போது மீண்டும் ஐரோப்பிய நாடுகள் இஸ்லாமிய நாடுகளில் விலங்குகளின் கொழுப்பு அடங்கிய பொருட்களை விற்பனை செய்ய அங்கீகாரம் கேட்டனர். விலங்குகளின் கொழுப்பு என்று ஐரோப்பிய நிறுவனங்கள் கூறிய போது எந்த வகையான விலங்குகள் என்பதற்கு ஆடுகள் மற்றும் மாடுகளின் கொழுப்பு என்று கூறினர். மீண்டும் ஒரு கேள்வி அப்போது எழுந்தது. ஆடு மற்றும் மாடுகளின் கொழுப்பு எனினும் அது முஸ்லிம்களுக்கு ஹராம்தான். ஏனெனில் ஐரோப்பிய நாடுகளில் ஆடுகள் மற்றும் மாடுகள் இஸ்லாமிய முறைப்படி அறுக்கப்படாததால். இக்காரணத்தின் அடிப்படையில் இஸ்லாமிய நாடுகளின் தடையும், முஸ்லிம்களின் புறக்கணிப்பும் இப்பொருட்கள் மீது தொடர்ந்தது. கி.பி.1970-லிருந்து ஐரோப்பிய நாடுகளில் வசித்து வருபவர்களுக்கு இந்த உண்மை தெரியாமலிருக்காது.

இஸ்லாமிய நாடுகளின் தடையால் ஐரோப்பிய பெரும் பெரும் தயாரிப்பு நிறுவனங்களின் விற்பனையின் மூலம் கிடைக்கும் 75% வருவாயை இழந்தனர். இந்த 75% என்பது பல பில்லியன்ஸ் டாலர்களுக்கும் அதிகமாகும்.

இதன் முடிவாக அவர்கள் விலங்குகளின் கொழுப்பு என்பதை எழுதுவதும் தவிர்த்து குறியீட்டு மொழியைப் (Coding Language) பயன்படுத்தத் துவங்கினர். குறியீட்டு முறையானது உணவு தரக்கட்டுப்பாடுத் துறையின் நிர்வாகத்தினருக்கு மட்டுமே தெரியும். அப்பொருட்களைப்பயன்படுத்தும் பொதுமக்களுக்கு குறியீட்டு கலவைகள் (E-INGREDIENTS) பற்றி சற்றும் அறிய வாய்ப்பில்லை.

E-INGREDIENTS
என்ற கலவைகளை பெரும்பாலான உற்பத்தி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. பற்பசை, ஷேவிங் கிரீம், சிவிங்கம், சாக்லேட், இனிப்புப் பண்டங்கள், பிஸ்கட்ஸ், கார்ன் பிளாக்ஸ் (Corn Flakes), டோஃபி (Toffees), டின் மற்றும் குப்பிகளில் நிரப்பப்பட்ட உணவுப்பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் என்று எல்லா பொருட்களிலும் இந்த வகையான கலவைகளை கலக்கின்றனர். விட்டமின் மாத்திரைகள் மற்றும் பல மருந்துப் பொருட்களிலும் பன்றிக்கொழுப்பின் கலவைகளைக் கலந்து முஸ்லிம் நாடுகளில் விற்பனைக்காகப் பரவச்செய்துள்ளனர்.

பன்றிக் கொழுப்பை உட்கொள்வதாலும், பயன்படுத்துவதாலும் உடலில் ஏற்படும் மாற்றங்கள் - வெட்கம் அகன்றுவிடுதல், தீய எண்ணங்களை உருவாகிவிடுதல், வன்முறை எண்ணங்களை வளர்த்துவிடல் போன்ற தன்மைகள் தங்களையறியாமலே மாற்றம் அடையச் செய்யக்கூடிய தன்மை பன்றிக் கொழுப்பு கொண்டுள்ளது என்பது மற்றுமொறு செய்தி. முஸ்லிம்களை இதுபோன்ற தீய தன்மைக்கு ஆளாக்க முயற்சிசெய்யும் அவர்களின் யுக்திகளில் இதுவும் ஒன்று.

இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால் ஒவ்வொரு முஸ்லிமும் தாங்கள் அன்றாடம் பயன்படுத்கூடிய பொருட்களில் கீழ்கண்ட கலவைக் குறியீடுகள (E-INGREDIENTS) இருக்கின்றனவா என ஒப்பிட்டுப்பார்த்து அதை முற்றிலும் நிராகரிக்க வேண்டும். ஏனெனில் இவையனைத்தும் பன்றியின் கொழுப்பிலிருந்து செய்யப்பட்டவையாகும்.

E100, E110, E120, E140, E141, E153, E210, E213, E214, E216, E234, E252,E270, E280, E325,
E326, E327, E334, E335, E336, E337, E422, E430, E431, E432, E433, E434, E435, E436, E440,
E470, E471, E472, E473, E474, E475, E476, E477, E478, E481, E482, E483, E491, E492, E493,
E494, E495, E542, E570, E572, E631, E635, E904.


தானாகவே செத்ததும், இரத்தமும், பன்றியின் மாமிசமும், அல்லாஹ் அல்லாத பெயர் சொல்லப்பட்டதும் ஆகியவைகளைத்தான் உங்கள் மீது ஹராமாக (தடுக்கப்பட்டவையாக) ஆக்கிருக்கிறான். ஆனால் எவரேனும் பாவம் செய்யாத நிலையில் - வரம்பு மீறாமல் (இவற்றை உண்ண) நிர்பந்திக்கப்பட்டால் அவர் மீது குற்றமில்லை. நிச்சயமாக அல்லாஹ் கருணைமிக்கோனும், மன்னிப்பவனுமாக இருக்கின்றான். (அல்குர்ஆன்-2:173)

உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரருக்கும் விரும்பாதவரை, (பரிபூரண) முஃமினாக ஆகமாட்டார் என நபி(ஸல்) கூறினார்கள்.
(
புகாரி, முஸ்லிம்: அனஸ்(ரலி))

இதுபோன்ற பன்றிக் கொழுப்பைக் கொண்டுள்ள பொருட்களை நாம் நிராகரிப்போம், மற்றவர்களுக்கும் இச்செய்தியை எடுத்துரைப்போம்!

சற்று காலத்தின் பின்சென்று சில நிகழ்வுகளை இதோடு தொடர்புபடுத்திப் பார்ப்போம். கி.பி 1857-ல் தெற்காசிய நாடுகளில் ஆங்கிலேயர்களின் ஆதிக்கம் கோலோச்சிய காலம், கிழக்கிந்தியக் கம்பெனியில் பல்வேறு இந்தியர்கள் சிப்பாய்களாக பணியாற்றிக்கொண்டிருந்தனர். அப்பொழுது பாதுகாப்புக்குத் தேவையான குண்டுகளும், துப்பாக்கித் தோட்டாக்களும், வெடிபொருட்களும் ஐரோப்பாவில் தயாரித்து ஆசிய நாடுகளுக்கு கடல்வழி மூலம் கொண்டுவந்தனர். ஐரோப்பாவிலிருந்து ஆசிய நாடுகளுக்கு கடல் மூலம் பயணிக்க அப்போது ஒரு மாதத்திற்கும் மேலாகியது. கடற் பயணத்தின்போது வெடிமருந்துப் பொருட்களும், தோட்டாக்களும் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் வேறுபட்ட வெட்பநிலையாலும் வெடித்துவிடுவதும் உண்டு, வீணடைந்துவிடுவதும் உண்டு. இத்தகைய நிலையைத் தவிர்க்க தோட்டாக்கள்மீதும், வெடிகுண்டுகள் மீதும் கொழுப்பு பூச்சை மேற்கொண்டனர். அதற்கு பயன்படுத்திய கொழுப்பு பன்றிகளின் கொழுப்பும் மற்றும் மாடுகளின் கொழுப்புமாகும்.

இக்கொழுப்புகள் பூசப்பட்ட குண்டுகள் அனைத்தும் அதன் மூடியைத் திறப்பதற்கு பற்களைப் பயன்படுத்துவது போன்ற அமைப்பைக் கொண்டிருந்தன. பன்றிக் கொழுப்பு மற்றும் மாடுகளின் கொழுப்பு பற்றிய செய்தி சிப்பாய்களிடையே பரவ ஆரம்பித்த்தது. ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனியில் இருந்த பெரும்பாலான முஸ்லிம் இராணுவ வீரர்கள் பன்றி இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட பிராணி என்பதாலும், இந்துமதத்தில் பசுவை தெய்வமாக வணங்குவதாலும் அதைப் பயன்படுத்தத் தயங்கினர். மேலும் இத்தகைய செயலை எதிர்த்து இந்திய சிப்பாய்கள் டில்லிக்கு அருகேயுள்ள மீரத் என்ற இடத்தில் 1857, மே 10ம் தேதி பஹதுர் ஷா தலைமையில் போராடினர். இப்போராட்டத்தில் 100 க்கும் மேலான ஐரோப்பியர்கள் கொல்லப்பட்டார்கள். இந்நிகழ்ச்சி "சிப்பாய்க் கலகம்" என்று வரலாற்றில் பதியப்பட்டுள்ளதை வரலாறு படித்தவர்கள் அறிவார்கள்.

சென்ற ஆண்டு நடந்த சில நிகழ்ச்சிகளையும் இதோடு சற்று தொடர்புபடுத்திப் பார்ப்போம். பாலஸ்தீனத்தில் முஸ்ஸிம்களைக் கொன்று குவித்தும் அராஜகம் புரிந்தும் வரும் யூதர்கள் தங்களைப் பாலஸ்தீனப் போராளிகளிடமிருந்து காத்துக்கொள்ள இத்தகைய செயலையே கையாண்டனர். அதாவது முஸ்லிம்கள் பன்றியைத் தொடவும் மாட்டார்கள், அது அவர்களுக்கு விலக்கப்பட்டதாகும் என்பதன் அடிப்படையில் யூத மத போதகரான எலிசர் பிசர் (Eliezer Fisher) பன்றிக் கொழுப்புகளை அடங்கிய பைகள் பேருந்துகளிலும், வியாபார வர்த்தகக் கட்டிடங்களிலும், அவர்கள் தங்கியிருக்கும் குடியிருப்புகளிலும் அதிகமாக கட்டித் தொங்கவிட ஆலோசனையளித்தார்.

தற்கொலைப் படைகள் தாக்குதல் நடத்தினால் அவர்கள் மேல் இந்த பன்றிக்கொழுப்பு படிந்து அசுத்தமான முறையில் இறந்துகிடப்பர். அதை அவர்கள் விரும்பவும் மாட்டார்கள். எனவே தற்கொலைப் படைகளிடமிருந்து தங்களைக் காத்துக்கொள்ள இந்த அணுகுமுறையை இஸ்ரேலிய பாதுபாப்பு அமைச்சராகிய யாக்கூ எட்ரி (Yaacov Edri)யும் பரிந்துரை செய்தார். இச்செய்தியை பெரும்பாலான ஊடகங்களிலும் வெளிவந்திருந்தது.

ஆரம்ப காலம் தொட்டே இஸ்லாத்தின் எதிரிகளான இதுபோன்றவர்கள் தங்களின் காழ்ப்புணர்ச்சிகளால் இவ்வாறான செயல்கள் புரிந்து வருவது புதிதல்ல. முஸ்லிம்களாகிய நாம் விழிப்புடன் இருப்போம் மேலும் அவர்களின் தயாரிப்புகளைப் புறக்கணிப்போம்.

"
நீங்கள் யூதர்களாக அல்லது கிறிஸ்தவர்களாக மாறிவிடுங்கள். நீங்கள் நேர்வழியை அடைவீர்கள்" என்று அவர்கள் கூறுகிறார்கள். "அப்படியல்ல! (நேரான வழியைச் சார்ந்த) இப்ராஹீமின் மார்க்கத்தையே பின்பற்றுவோம், (இணை வைக்கும்) முஷ்ரிக்குகளில் நின்றும் அவரில்லை" என்று (நபியே!) நீர் கூறுவீராக! (அல்-குர்ஆன் - 2:135)

நம் அனைவரையும் நேர்வழியில் செலுத்த அல்லாஹ் போதுமானவன்.
 
 
إنما الأعمال بالنيات
"The reward of deeds depends upon the intentions"
 

Tuesday, May 1, 2012

மறுமையில் பிறந்த மேனியுடன் எழுப்பப்படுவார்கள்

'நிச்சயமாக தீர்ப்பு வழங்கும் (கியாமத்) நாள் நேரங் குறிக்கப்பட்டதாக இருக்கிறது. சூர் ஊதப்படும் அந்நாளில் நீங்கள் கூட்டம் கூட்டமாக வருவீர்கள்'. (அல்குர்ஆன் 78:17,18)
இரண்டாம் சூர் ஊதப்பட்டவுடன் மனிதர்கள் எவ்வாறு உயிர்பிக்கப்படுவார்கள்? அதைத் தொடர்ந்து நடைபெறுவது என்னவென்பதை இனி காண்போம்.
பூமியைப் பிளந்து வெளியேறுவர்
இரண்டாவது சூர் ஊதப்பட்டவுடன் எல்லா மனிதர்களும் பூமியைக் கிழித்துக் கொண்டு வெளிப்படுவார்கள்.
'பூமி பிளந்து அவர்கள் வேகமாக வரும் நாள் அது தான். யாவரையும் ஒன்று சேர்க்கும் நாள்! இது நமக்கு மிக எளிதானதேயாகும்'. (அல்குர்ஆன் 50:44)
'இலக்குகளை நோக்கி செல்வது போல் அவர்கள் மண்ணறைகளிலிருந்து வெளியேறுவார்கள்'. (அல்குர்ஆன் 70:43)
அழிவு நாளின் போது அழிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட அனைத்து மனிதர்களும் பூமிக்குள்ளிருந்தே உயிருடன் வெளிப்படுவார்கள். ஏதோ ஒரு இலக்கை நோக்கிச் செல்வது போல் வேகமாக விரைவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.
மண்ணறைகளில் தங்கிய காலத்தை உணரமாட்டார்கள்
பல்லாயிரம் ஆண்டுகள் மண்ணறைகளில் புதைந்து கிடந்தவர்கள் உட்பட எவருமே தாம் மண்ணறைகளில் தங்கியிருந்த கால அளவை உணரமாட்டார்கள். ஏதோ சற்று நேரம் உறங்கி விட்டு எழுந்திருப்பதாகவே அனைவரும் உணர்வார்கள். இதைப் பின்வரும் வசனங்கள் விளக்குகின்றன.
'இவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை இவர்கள் பார்க்கும் நாளில் பகலில் சிறிது நேரம் தவிர (மண்ணறைகளில்) இருக்க வில்லை என்பது போல் அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 46:35)
'நிச்சயமாக அதை அவர்கள் காணும் நாளில் காலையிலோ, மாலையிலோ சொற்ப நேரமே தங்கியிருந்ததாக அவர்களுக்குத் தோன்றும்'. (அல்குர்ஆன் 79:46)
'அன்றியும் அந்த நாள் வரும்போது சற்று நேரமே தங்கியிருந்ததாக குற்றவாளிகள் சத்தியம் செய்து கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:55)
எங்களுக்கு ஏற்பட்ட துக்கமே (எங்கள் உறங்குமிடங்களிலிருந்து) எங்களை எழுப்பியவர்கள் யார்?' (அல்குர்ஆன் 36:52) இதை 10:45, 17:62 வசனங்களும் கூறுகின்றன. கப்ருகளில் வேதனை செய்யப்பட்டதும், பல்லாண்டு மண்ணறைகளில் கழித்ததும் அவர்களுக்குத் தெரியாது. உறங்கிய போது ஏற்பட்ட கனவாகவே அதை அவர்கள் நினைத்துக் கொள்வார்கள். எங்கள் உறக்கத்திலிருந்து எழுப்பியவர் யார் என்று அவர்கள் கேட்பது இதனால்தான்.
இந்த உணர்வுடன் எழுவோர் குற்றவாளிகள் தாம், நல்லடியார்கள் உலகில் வாழும் போதே மறுமை நாளை நம்பியவர்கள் இந்த நிகழ்ச்சிகள் ஏற்படும் என்பதை குர்ஆனிலிருந்து படித்து அறிந்த மக்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள். 30:55 வசனத்தில் 'குற்றவாளிகள்' என்று கூறப்படுவதிலிருந்து இதை அறியலாம். 30:56 வசனத்தில் நல்லடியார்கள் இவ்வாறு எண்ண மாட்டார்கள் என்பதைத் தெளிவாகவும் இறைவன் கூறுகிறான்.
'ஆனால் எவர்களுக்கு கல்வியும் ஈமானும் கொடுக்கப்பட்டனவோ அவர்கள் 'அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி திரும்ப உயிர் கொடுத்து எழுப்பப்படும் நாள் வரையில் (மண்ணறையில்) தங்கியிருந்தீர்கள். உயிர் பெற்று எழும் நாள் இது தான். இதனை அறியாதவர்களாகவே நீங்கள் இருந்தீர்கள் என்று கூறுவார்கள்'. (அல்குர்ஆன் 30:56)
பிறந்த மேனியாக எழுப்பப்படுவார்கள்
நபிமார்கள், நல்லவர்கள், ஆண்கள், பெண்கள் மற்றும் அனைவருமே நிர்வாணமாக எழுப்பப்படுவார்கள். எவருமே ஆடை யணிந்திருக்க மாட்டார்கள். மேலும் இவ்வுலகில் கத்னா செய்திருந்தவர்கள் உட்பட அனைவரும் கத்னா செய்யப்படாதவர்களாகவே எழுப்பப்படுவார்கள்.
'நிச்சயமாக நீங்கள் நிர்வாணமாகவும், செருப்பணியாமலும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிவிட்டு 21:104 வசனத்தை ஓதிக்காட்டினார்கள். (அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
'கியாமத் நாளில் மக்கள் செருப்பணியாமலும், நிர்வாணமாகவும், கத்னா செய்யப்படாமலும் எழுப்பப்படுவீர்கள்' என்று நபி (ஸல்) கூறிய போது 'அல்லாஹ்வின் திருத்தூதரே! ஆண்களும் பெண்களும் திரண்டிருக்கும் போது சிலர் சிலரைப் பார்ப்பார்களே? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'ஆயிஷாவே! சிலர் சிலரைப் பார்த்துக் கொண்டிருப்பதை விட நிலமை மிகவும் கடுமையானதாக இருக்கும்' என்று விடையளித்தார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி, முஸ்லிம்)
சிலர் குருடர்களாகவும், ஊமையர்களாகவும் எழுப்பப்படுவர்
எவ்வாறு பிறந்தார்களோ அவ்வாறே மறுமையில் எழுப்பப்படுவார்கள் என்றாலும் உலகில் வாழும் போது பார்வை, செவி, பேசும் திறனுடன் இருந்து தவறான வழியில் சென்றவர்கள் குருடர்களாகவும் ஊமையர்களாகவும் செவிடர்களாகவும் எழுப்பப்படுவார்கள்.
'யார் வழிகெட்டு விட்டார்களோ அவர்களுக்கு அவனையன்றி உதவிசெய்வோர் எவரையும் நீர் காண மாட்டீர்! மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் முகம் குப்புற (நடப்பவர்களாக) கியாமத் நாளில் எழுப்புவோம்'. (அல்குர்ஆன் 17:97)
'எவன் என்னுடைய போதனையைப் புறக்கணிக்கின்றானோ அவனுக்கு நிச்சயமாக நெருக்கடியான வாழ்க்கையே இருக்கிறது. மேலும் நாம் அவனைக் கியாமத் நாளில் குருடனாகவே எழுப்புவோம். (அப்போது அவன்) என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? என்று கூறுவான். (அதற்கு இறைவன்) அவ்வாறு தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்த போது அவற்றை நீ மறந்து விட்டாய். அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். ஆகவே எவன் தன் இறைவனுடைய வசனங்களின் மேல் நம்பிக்கை கொள்ளாமல் வரம்பு மீறி நடக்கின்றானோ அவனுக்கு இவ்வாறு தான் நாம் கூலி கொடுப்போம். (இதை விட) மறுமையின் வேதனை மிகவும் கடுமையானதும், நிலையானதுமாகும்'. (அல்குர்ஆன் 20:124-127)
இறைவனின் வேத வசனங்களை நம்பாத அனைவரும் குருடர்களாகவே எழுப்பப்படுவார்கள் என்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன.
முகம் கறுத்தவர்களாக எழுப்பப்படுவர்
விசாரணைக்குப் பின் கிடைக்கும் தண்டனை தனியாக இருக்க விசாரணைக்கு முன்பே குற்றவாளிகள் குருடர்களாகவும், செவிடர்களாகவும், ஊமைகளாகவும், தனி அடையாளத்துடன் எழுப்பப்படுவது போல், முகம் கறுத்தவர்களாகவும் எழுப்பப்படுவார்கள். நல்லவர்கள் உலகில் கறுப்பர்களாக இருந்தாலும் - வெண்மை முகத்தவர்களாகவும், தீயவர்கள் - உலகில் வெண்மை நிறத்தவர்களாக இருந்தாலும், முகம் கறுத்தவர்களாகவும் எழுப்பப்படுவர். இதைப் பின் வரும் வசனம் விளக்குகின்றது.
'அந்த நாளில் சில முகங்கள் வெண்மையாகவும், மற்றும் சில முகங்கள் கறுப்பாகவும் இருக்கும். எவரது முகங்கள் கறுப்பாக உள்ளனவோ அவர்களிடமும் 'நீங்கள் நம்பிக்கை கொண்டபின் நிராகரித்தீர்கள் அல்லவா? நீங்கள் நிராகரித்ததற்காக இந்த வேதனையைச் சுவையுங்கள் (என்று கூறப்படும்)''. (அல்குர்ஆன் 3:100)