Tuesday, May 17, 2011

தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும்

முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும் தற்சமயம் அதிக அளவில்முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இத‌ற்கான‌ முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க‌ வேண்டி இருக்கிற‌து. இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
1. பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை முறையாக கவணிக்க தவறுவது. 2. அளவிற்கு அதிகமாக பணம் கொடுப்பது. வசதி உள்ளது என்பதற்காக மொபைல் போன் போன்ற சாதனங்களை வாங்கி கொடுப்பது.
3. மொபைல் ஃபோனில் தங்கள் பெண் குழந்தைகள் யாருடன் பேசுகின்றார்கள், என்ன எஸ்.எம்.எஸ் வருகின்றது போன்றவற்றை கவணிக்காமல் இருப்பது.
4. பெண்கள் எங்கே செல்கின்றார்கள், எப்போது வருகின்றார்கள் என்பதை கவனிக்க அல்லது கண்டிக்க தவறுவது.
5. மார்க்கத்தை போதிக்காமல், காதல் படம், பாடல் போன்ற கேளிக்கைகளை சி.டி. வீடியோ என வீட்டிற்குள் அனுமதித்து வழிதவற வைப்பது.
6. பெண் குழந்தைகளை தனிமையில் வாழ அனுமதிப்பது. (உதாரனம். வீட்டில் தனி அறை, தனி படுக்கை என என்ன செய்தாலும் தெறியாதவாரு நாமே அவர்களுக்கு வசி செய்து கொடுப்பது)
7. வெளிநாட்டில் வாழும் இளைஞர்கள் தங்கள் மனைவியரை தனிக்குடித்தனம் வைப்பது அல்லது அவர்கள் இஸ்ட்டப்படி உரிய கண்கானிப்பின்றி வாழ அனுமதிப்பது.
8. அந்நிய ஆடவருடன் பழகும் சூழ்நிலைகளை ஏற்ப்படுத்தி கொடுப்பது. பெண்களை தனியாக ஜவுளி கடை, நகைக்கடை என மார்க்கெட்டிற்கு அனுப்புவது அங்கு அந்நிய ஆண்கள் இவர்களை பொருட்களை இலவசமாக கொடுத்து தங்கள் வசப்படுத்த உதவுகின்றது. நமது பெண் பிள்ளைகளை பாதுகாக்க சில வழிகள்: திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்: ‘இன்னும் முஃமினான பெண்களுக்கு நீர் கூறுவீராக! தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும். தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்”. (அல்குர்ஆன்: 24:37) ”நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விருப்பினால் (அந்நியருடம் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனென்றால் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ அத்தகய)வன் ஆசை கொள்வான். இன்னும் நீங்கள் நல்லவற்றையே பேசுங்கள். (அல்குர்ஆன் 33:32)
1.அந்நிய ஆணுடன் பழகுவதும் ஹராம் (இறைவனால் தடுக்கப்பட்டுள்ளது) என்பதனை கண்டிப்புடன் கூறி அனுப்புங்கள். அந்நிய ஆண்களிடம் கண்டிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
2.ஆண்களும் பெண்களும் இணைந்து படிக்கும் பள்ளி, கல்லூரிகளில் தான் இந்த சதி வேலை அதிகமாக நடக்கிறது என்பதை கவனத்தில் கொள்ளவும். 3.தனியாக செல்லும் மாணவிகளை கல்லூரிகளுக்கு முடிந்தவரை நாமே நமது சகோதரிகளை அழைத்துச் சென்று கல்லூரிகளில் விடுவது, திரும்ப அழைத்து வருவது மிகவும் நல்லது. பெற்றோர்கள் முக்கியமாக கல்லூரிகள், மற்றும் பள்ளிகளில் படிக்கும் தங்கள் பெண் குழந்தைகளின் வருகைப்பதிவு (அட்டன்டன்ஸ்) சரியாக உள்ளதா என வாரம் ஒருமுறை சரிபார்க்க வேண்டும். 4.வெளிநாட்டிற்கு செல்லும் கணவன்மார்கள் பெரும்பாலும் தங்கள் இளம் மனைவியரை பெற்றோருடனோ அல்லது மனைவியின் பெற்றோருடனோ வாழ்வதற்கு விட்டுச் செல்வது நல்லது.
5.பெரும்பாலும் வீட்டில் உள்ள பெண்களுக்கு மொபைல் போன்களை வாங்கிக் கொடுக்க‌ வேண்டாம். லேன்ட் லைன் டெலிபோன் மட்டும் இருந்தால் போதுமானது.
6.வீட்டில் தனியாக உள்ள பெண்கள் தங்கள் தொலைபேசி எண்களை ஆட்டோ டிரைவர், கடைகாரர் என யாருக்கும் கொடுக்க வேண்டாம். எந்தச் சூழ்நிலையிலும் யாருக்கும் உங்கள் போன் நம்பரை கொடுக்க‌ வேண்டாம். 7.தெறியாத எண்களிலிருந்து போன் வந்தாலோ அல்லது அந்நிய ஆடவர் யாராவது உங்களை ஈர்க்கும் வகையில், அல்லது உங்கள் உணர்வுகளை கிளர்ச்சி அடையச் செய்யும் வகையில் பேசினாலோ அல்லது மெஸேஜ் அனுப்பினாலோ உடனடியாக அந்த தொடர்பை துன்டியுங்கள். மீண்டும் பேசவோ அல்லது பதில் அளிக்கவோ முற்படாதீர்கள். ஏனென்றால் இதன் மூலமே அவர்கள் தங்கள் முதல் தொடர்பை ஆரம்பிக்கின்றார்கள். ஆகவே ஆரம்பத்திலேயே உங்கள் கணவர், தந்தை, அல்லது உறவினர்களன்றி யாரிடம் இருந்து அவசியமற்ற அழைப்புகளோ, மெஸேஜோ வந்தால் அவற்றிற்கு தயவு செய்து பதில் அளிக்காதீர்கள் அது எவ்வளவு கவர்ச்சியானதாக இருந்தாலும் சரியே.
8. கடைகளுக்கு செல்லும்போது உங்கள் கணவர்மர்களை பற்றியோ அல்லது குடும்படதினர் பற்றியோ கடையில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்காதீர்கள் மிகக் கண்டிப்புடன் இது உங்களுக்கு அவசியமற்றது என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லுங்கள். உங்கள் கணவர்மார்கள் வெளிநாட்டிலோ அல்லது வெளியூரிலோ இருக்கும் விசயத்தை அவசியமின்றி அந்நியர்களுக்கு சொல்லாதீர்கள் அவர்கள் எவ்வளவு நல்லவர்களாக இருந்தாலும் சரியே.
9. கல்லூரி, பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் மிகவும் உஷாராக இருப்பது நல்லது ஏனென்றால் நீங்கள் தான் இவர்களின் முதல் குறி, பார்ப்பதற்கு அப்பாவியாகவும், பாவமான தோற்றத்துடனும் உங்கள் மனதில் இரக்கத்தை ஏற்ப்படுத்தும் வகையிலும்தான் இவர்களின் முதல் அறிமுகம் இருக்கும். மிகவும் நல்லவன், பாவமாக உள்ளது என்று நீங்கள் சற்று இழகினால் போதும் உங்கள் அழிவை நோக்கிய பயனத்தை நீங்கள் துவங்கி விட்டிர்கள் என்று அர்த்தம்.
10. பெரும்பாலும் எந்த சக மாணவனிடமும் உங்கள் தொலை பேசி என்களை கொடுக்கதீர்கள், அதுபோல் சக மாணவியரால் நல்லவன் என அறிமுகப்படுத்தப்படும் யாரையும் நீங்கள் ஆண் நண்பர்களாக ஆக்கி கொள்ளாதீர்கள். பெரும்பாலும் இவர்கள் தங்கள் வலையில் வீழ்ந்த மற்ற பெண்கள் மூலமாகவே அடுத்த பெண்ணிற்கு தூன்டிலை வீசுகின்றார்கள் என்பதை நீங்கள் கவணத்தில் கொள்ள வேண்டும்.
11. தோழிகள் துணைக்கு வந்தாலும் கூட உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுடன் நீங்கள் வெளியே செல்வதோ, உணவருந்த செல்வதோ அவர்களுடன் பேசுவதோ வேண்டாம். உங்கள் தோழிகளின் ஆண் நண்பர்களுக்கும் உங்கள் தொலைபேசி எண்களை கொடுக்க வேண்டாம். ஏனென்றால் இங்கிருந்துதான் தொடர்புகள் ஆரம்பமாகின்றன.
12. உங்கள் தோழியர் எவ்வளவு நெருக்கமாக இருந்தாலும் கூட அவர்களின் செல்போன் மூலம் உங்களை படம் எடுப்பதை அனுமதிக்க வேண்டாம்.முக்கியமாக நீங்கள் தனிமையில் இருக்கும் பொதும் ஆடைகள் கவனமின்றி இருக்கும் போதும். அப்படி படமெடுப்பது தெறிந்தால் உடனடியாக அதை வாங்கி அழித்த விடுங்கள். இது போன்ற நிகழ்வுகளை உடனே பெற்றோருக்கும் சகோதரர்களுக்கும் தெறியப்படுத்துங்கள்.
13. முதன்மையாக ஆண்,பெண் இருவருடைய உள்ளத்திலும், செயலிலும் – இறையச்சம், ஈமான் இருக்க வேண்டும்.
14. பர்தா முறையை கட்டாயம் உபயோகப்படுத்துதல். முறையான‌ ஆபாசம் இல்லாத லூசான பர்தாக்களை அணியச் சொல்லுங்கள், பர்தா என்பது அழகை மறைப்பதற்கு டைட்டாகவும், செக்சியாகவும் அறைகுறை ஆடைகளை பர்தா என்ற பெயரில் அணிவது தங்கள் அழகை வியாபாரமாக்கவே செய்யும்.
15. வட்டிக்கு வாங்குவது. தவனை முறையில் வாங்குவது (பைனான்ஸ்) போன்வற்றை தவிருங்கள், இது போன்ற ஆண்களின் தொடர்பால் இலகுவாக பெண்கள் எப்படி பாலியல் பலாத்காரத்துக்கு உள்வாங்கப் பட்டு புளுபலிம் எடுக்கவும் பயன் படுத்தப்படுகின்றார்கள். *அந்நியருடன் ஓடிப்போகும் அல்லது ஓடிப்போன பெண்களின் நிலை:* பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் மார்க்க ஞானமில்லாததாலும், தங்கள் தோழிகள் என்று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜாலத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பையும், பெற்றோரையும், சகோதரர்களையும், உறவுகளையும் தீராத்துயரில் மூழ்கடித்துவிட்டு பயிற்றுவிக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னால் ஓடிப்போகின்றாள். ஓடிப்போகும்போது இவள் தனது பெற்றோரின் ஓட்டுமொத்த சேமிப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்டப்படுகின்றாள். இவள் கொண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவள் தூக்கி வீசப்படுகின்றாள். இறுதியல் இளமையும், செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியாமல், எங்கும் செல்ல முடியாமல் இறுதியில் தனது வயிற்றுப் பிழைப்புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுகன் தனது அடுத்த பணியினை தொடாந்தவனாக அடுத்த இளம்பெண்னை மயக்கும் வேலையில் கவனமாகின்றான். ஆனால் இந்த அயோக்கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னின் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமையிலும் நரகம். பெற்றேர்களே, கணவன்மார்களே, நீங்களும் சற்று சிந்திப்பீர், வெள்ளம் கரைகடந்தபின் கதறாமல், இப்போதே அனைபோட திட்டமிடுவீர், உங்கள் பெண்பிள்ளைகளை கண்கானியுங்கள்.

Wednesday, August 11, 2010

அமெரிக்காவில் முஸ்லிம்கள்-ஓர் பயணக்கட்டுரை

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் 14..7.2010 மாலை சி.என்.என் டி.வி சேனல் செய்தியினைப் பார்த்துக் கொணடிருந்த எனக்கு ஒரு பதினைந்து வயது மதிக்கத்தக்க ஹிஜாப் அணிந்த முஸ்லிம் சிறிமி மிகவும் வீராவேசமாக ஆங்கிலத்தில் பேசிக்கொண்டிருந்தாள். அது என்ன பேச்சு என்று கேட்க உங்களுக்கு ஆவலாக இருக்கும். 2001 செப்டம்பர் மாதம் 9ந்தேதி அமெரிக்காவின் வர்த்தக நகரமான நியூயார்க்கில் இரட்டைக் கோபுரத்தினை விமானகங்கள் மூலம் மோதி தகர்த்து அதன் மூலம் 2000 பேர்களுக்கு உயிர் சேதமிட்ட இடத்தின் அருகில் ஒரு பள்ளிவாசல் கட்ட அனுமதிக்கலாமா என்ற கருத்தாய்வுக் கூட்டத்தில் தான் அந்த சிறுமி ஆவேசமாக பேசினாள். அவளுக்கு முன்பு பேசிய அமெரிக்கர்கள் முஸ்லிம்கள் தீவிரவாத செயலில் ஈடுபட்டவர்கள், ஆகவே அந்த இடத்தில் மசூதி கட்ட அனுமதிக்கக்கூடாது என்று பேசினார்கள. ஆனால் அவர்களுக்கு பதில் சொல்லும் விதத்தில் இந்த 15 வயது சிறிமி, ‘தன்னுடைய பெற்றோர்களும், உறவினர்களும் கூட அந்த சம்பவத்தில் இறந்து தான் அனாதை முஸ்லிம் சிறிமியாக இருப்பதாகவும் அதற்காக எல்லா முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று கூறி முஸ்லிம் அமைதியாக வழிபடுவதிற்கு பள்ளிவாசல் கட்ட இடம் மறுப்பது என்ன நியாயம் என்று கேட்டது, சிலப்பதிகார இலக்கியத்தில் தன்னந்தனியாக கணவன் கோவலனை இழந்த கண்ணகி மதுரை பாண்டியமன்னர் தர்பாரில் நியாயம் கேட்டது போன்ற இலக்கிய உண்மை நிகழ்ச்சியாக இருந்தது. அந்தப் முஸ்லிம் சிறிமி பேசியதினைக் கேட்டு வாயடைத்த கருத்துக் கேட்க வந்த அமெரிக்க நடுவர்கள் கருத்துக் கேட்டும் நிகழ்ச்சியினை ஒத்தி வைத்து விட்டு சென்று விட்டார்கள். 1) அந்த சிறிமி பேசிய பின்பு அமெரிக்காவில் வாழும் முஸ்லிம்கள் வழிபாடு தளங்கள,; அவர்களின் வாழ்க்கை முறைகள் பற்றி செய்திகளை சேகரித்து உங்களுக்கு வழங்கலாம் என் ஆசைப்பட்டு இந்தக் கட்டுரை எடுதுகிறேன்:அமெரிக்காவில் இஸ்லாமிய கம்யூனிட்டிகள் 1920ல் தோன்றி வீடுகளில் கூட்டுத் தொழுகை நடத்தி தங்களுடைய சமூக பிரச்சனை பற்றி விவாதிக்க ஆரம்பித்துள்ளனர். ஆனால் 1950 ஆம் ஆண்டில் தான் ‘நேஷன் ஆப் இஸ்லாம’ என்ற அமைப்பினை அமெரிக்காவில் வாழும் கறுப்பின மக்கள் ஹார்லீன் நகரத்தில் ஆரம்பித்து ஒரு பள்ளிவாசலினை உருவாக்கியுள்ளனர்.ஆனால் இன்று ஆயிரத்திற்கு மேலான பள்ளிகள் உள்ளன. அமெரிக்காவில் மிக பெரிய பள்ளிவாசல் அடிராய்டு நகரில் உள்ள இஸ்லாமிக் செண்டரில் 1962லிருந்து 1965வரை உருவாக்கப்பட்டுள்ளது. முதலில் அமெரிக்கா- ஆப்ரிக்க முஸ்லிம் மக்களின் உதவியால் உருவாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் பின்பு எகிப்து, சௌதி அரேபியா, ஈரான் மற்றும் லெபனீஸ் அரசுகளின் பண உதவியால் எழுப்பப்பட்ட பள்ளிவாசல்கள் அனைத்து இன முஸ்லிம் மக்களும் தொழும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. இஸ்லாமியர் மதசேவைக்காக ‘கவுன்சில் ஆப் மஸ்ஜித்’ அமைக்கப்பட்டு அவர்களின் தேவைகளை நிறைவேற்றப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட சர்வேயின் படி 33 சதவீத தெற்கு ஆசிய மக்களும், 30 சதவீத அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவரும், 25 சதவீத அரபிய மக்களும் தொழுகைக்காக பள்ளிக்கு வருகிறார்கள். பள்ளிவாசலில் தொழுகை நடத்துவதிற்காக இன்னமும் இமாம்கள் எகிப்து, துருக்கி, பாலஸ்த்தீனம் ஆகிய நாடுகளிலிருந்து தருவிக்கப்படுகிறார்கள். அத்துடன் ‘இமாம்கள் கவுன்சில்’ 1972 ஆம்; ஆண்டு நிறுவப்பட்டு இமாம்களுக்கான பயிற்சி கொடுத்து அமெரிக்காவில் வசிக்கும் மார்க்க அறிவாளிகளே தொழுகை நடுத்தும் முறை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிவாசலும் மற்றும் அதனை ஒட்டியுள்ள கம்யூனிட்டி சபை கட்டிடங்களும் மார்க்க மற்றும் பொது கல்விக்காக பயன்படுத்தப்படுகிறது. வாரந்தோறும் சிறுவர் மார்க்கக் கல்வி கற்க ஏற்பாடும், முதியோர் மார்க்க கல்விக்கும், இஸ்லாமியர் அல்லாதவர் இஸ்லாத்தினைப் பற்றி தெரிந்து கொள்வதிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சர்வே படி அமெரிக்கா முஸ்லிம்களில் 10 சதவீதத்திலிருந்து 20 சதவீதம் வரை ஐந்து வேளை தொழுகின்றனர். ஆனால் அமெரிக்கா கிறித்துவர்கள் 40 சதவீதம் கிறத்துவ சர்ச்சுகளுக்குச் செல்கின்றனர்.தற்போது கிட்டத்தட்ட 2000 பள்ளிவாசல்கள் உள்ளன. அதனில் 200க்கு மேற்பட்ட பள்ளிவாசல்கள் கலிபோர்னியா, நிய+யார்க் மாநிலங்களில் உள்ளன. 100லிருந்து 200 வரை பள்ளிவாசல்கள் டெக்ஸாஸ,; புளோரிடா, இல்லினோஸ், ஓகியோ, மிக்சிகான், பென்சில்வேனியா, நியூஜெர்சி போன்ற மாநிலங்களில் உள்ளன, 50திலிருந்து 100வரை பள்ளிவாசல்கள் வாசிங்டன், டென்னசி, அரிசோனா, ஓக்லாமா போன்ற மாநிலங்களில் உள்ளன. 2) அமெரிக்காவில் இஸ்லிமிய சமூதாய ஆரம்பமும் வளர்ச்சியும்:முதன் முதலில் 16 ஆம் நூற்றாண்டில் ஸ்பெயின் நாட்டினவர் அமெரிக்க மண்ணில் காலடி வைக்கும் போது இஸ்லாமியர் வந்தனர் எனக் கூறப்பட்டாலும் 1860ஆம் ஆண்டில் குடியேறிய சிரியா மட்டும் லெபனான் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக இருந்தனர். இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின்பு ஐரோப்பா, ஆசியா, கிழக்கு ஆப்ரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து முஸ்லிம்கள் குடியேறினர். முதன் முதல் அமெரிக்க முஸ்லிம்கள் ஆப்பிரிக்க நாடுகளைச்சார்ந்த அடிமைகள் தான் என்றால் மினையாகாது. அவர்கள் பெரும்பாலோனோர் படித்தவர்கள். மார்ட்டின் லூதர் கிங் அமெரிக்கா வெள்ளையினத்தினவரிடமிருந்து கறுபு;பின மக்களை விடுதலைக்காகவும் அவர்கள் உரினைமக்காகவும் குரல் கொடுத்தார். ஆனால் அமெரிக்கா-ஆப்பிரிக்கா முஸ்லிம் தலைவர் எலிஜா முகம்மது ‘நேஷன் ஆப் இஸ்லாம’; இயக்கத்தினை ஆரம்பித்து வெள்ளை நிற அமெரிக்க மக்களுடன் கறுப்பின மக்களுக்காக சமாதானத்தில் இஸ்லாம் மதத்தினை பரப்ப வழிவகுத்தார். எலிஜா முகம்மது கறுப்பின அமெரிக்கருக்கு தனி கறுப்பின இஸ்லாமிய மாநிலம் கேட்டார். அந்த இயக்கத்தினைச் சார்ந்தவர்கள் பல் வேறு குற்ற பின்னணியில் சிறையில் வாடும் கறுப்பினத்தவரை திருத்தி இஸ்லாத்தினைத் தழுவ தனி அமைப்பான ‘ரிகேபிளிட்டேஷன் ஆப் அமெரிக்கா பிளாக்’ ஏற்படுத்தினர். ஜெயிலில் வாடும் கறுப்பின மக்களை சந்தித்து கீழ்கண்ட உபதேசங்கள் செய்கின்றனர்:1) கறுப்பராக பிறந்திருப்பது ஒரு வரப்பிரசாதம் அது இழிவல்ல. ஆகவே தாழ்வு மனப்பான்மையினை விட்டொழிக்க வேண்டும்.2) நீங்கள் எந்த முஸ்லிமையினையும் அழுக்கான உடையிடனோ அல்லது முகச்சவரம் செய்யாத நபரையோ உடல் சுத்தமில்லாத நபரைவேயா பார்க்க முடியாது. 3) எந்த் முஸ்லிமையும் குடிபோதைக்கு ஆளாவதினைப் பார்க்க முடியாது.4) எந்த முஸ்;லிமும் போதை தரும் புகைப்பான்களை உபயோகிப்பதினைக் காண முடியாது.5) எந்த முஸ்லிமும் அநாகரிக ஆடல்களில் ஈடுபட்டதினை பார்க்க முடியாது.6) எந்த முஸ்லிமும் தன் மனவியினைத் தவிர வேற்றுப் பெண்களில் உடல் ரீதியான தொடர்பு கொள்வதினைக் காண முடியாது.7) எந்த முஸ்லிமும் சிறிய வருமானம் தரும் வேலை செய்யாமல் கூட வாழ பிச்கையெடுப்பதினைக் காணமுடியாது.8) ஏந்த முஸ்லிமும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டதினைக்காண முடியாது. மேற்கொண்ட போதனைகள் மூலமே பல்லாயிரக்கணக்கான அமெரிக்க-ஆப்ரிக்க இனத்தவர் முஸ்லிம் மதத்திற்கு மாறினர். அதில் ஒருவர்தான் உலகக் குத்துச்சண்டை பதவியிலிருந்து பாலியில் குற்றச்சாட்டில் ஜெயிலில் வாடிய மைச் டைசன.; இன்று இஸ்லாத்திற்கு மாறி மாலிக்காக வெளி வந்துள்hர். எலிஜா முகம்மது 1965 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பின்பு அவருடைய மகனார் வாலாஸ் கறுப்பின முஸ்லிம்களுக்கு தனி மாநில கொள்கையினை கைவிட்டு கறுப்பினர் அல்லாத மக்களையும் நேஷன் ஆப் இஸ்லாம் இயக்கத்தில் சேர்த்துக் கொண்டார். அந்த அபை;பிற்கு மேற்கத்திய ‘வேர்ல்டு கமிட்டி ஆப் இஸ்லாம’ என்று பெயர் சூட்டினார். அதன் பின்பு அந்த அமைப்பிற்கு ‘அமெரிக்கன் முஸ்லிம் மிஷன்’ என்று மாற்றப்பட்டது.
3) குடிபெயர்ந்த அமெரிக்க முஸ்லிம்களின் பழக்க வழக்கங்கள்: 1) ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத்தாரும் 100 டாலரிடமிருந்து 250 டாலர் வரை வருடத்திற்கு செலுத்தி ஒவ்வொரு கம்யூனிட்டி அமைப்பிலும் உறுப்பினராகி உள்ளனர்.2) தங்கள் குழந்தைகளை இஸ்லாமிய மார்க்க போதனைகளை வாரத்தில் இருமுறை கற்க வழிவகை செய்கின்றனர்.3) பள்ளிவாசல் நிதிக்காக விருந்துடன் கூடிய சிறப்பு முகாம் நடத்தி வசூல் செய்கின்றனர். ஒரு தடவை நான் அது போன்ற முகாமில் கலிபோர்னியா மாநிலம் பிரிமாண்ட் பள்ளிவாசலில் பங்கேற்றேன்.அப்போது நான், நீ என்று ஆண்கள், பெண்கள,; சிறார்கள் போட்டிபோட்டு நன்கொடை செலுத்தியதில் ஒரு லட்சத்து பத்தாயிரம் டாலர் நன்கொடையாக கிடைத்தது.4) வெள்ளிதோறும் பெண்கள் தங்கள் வீட்டில் தயார்செய்த பண்டங்கள், உணவுப் பொருட்கள், கைவினைப் பொருட்கள் விற்று அந்தக் பணத்தினை பள்ளிவாசலுக்காக நன்கொடையாக தருகின்றனர்.5) சிறப்பு பேச்சாளர்களின் பேச்சினை ஏற்பாடு செய்து அதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அது போன்ற மக்கா பல்கலைக் கழகத்தில் பயிற்சி பெற்று முதலிடத்தில் தேறிய ஒருவருடைய கம்யூட்டர் விளக்கத்துடன் கூடிய சொற்பொலிவினை நான் சானோஸ் கம்யூனிட்டி பள்ளியில் கேட்டேன்.6) முஸ்லிம்கள் ஹலாலான உணவினையே சாப்பிடுகின்றனர். பெரும்பாலான கறிக்கடைகள் பாகிஸ்தானியர் மற்றும் ஆப்கானிஸ்தியர் தான் நடத்துகின்றனர். கலிபோர்னியாவிலுள்ள சாப்ட்வேர் தலைமையிடமான சானோசில் ஒரு சைனீஸ் முஸ்லிமின் ஹலால் ஹோட்டலில் அத்தனைக் கூட்டம் என்றால் பாருங்களேன்.7) கம்யூனிட்டியில் இரண்டு மாதத்திற்கு ஒரு முறை ‘பாட்லாக்’, ‘பார்க்யூ’ என்ற முஸ்லிம் குடும்பங்கள் கூடி பொது பார்க்கில் விருந்துண்கின்றனர். அப்போது குடும்ப உறுப்பினரிடையே கலந்துரையாட ஏதுவாக உள்ளது. ஆனால் அப்படி நடக்கும் விருந்தோம்பல் நிகழ்வுகளில் கூட ஒவ்வொரு நாட்டிலும் அல்லது மாநிலத்தில் வந்தவர்களுக்கிடையே மட்டும் பழகும் பழக்கமாக இருந்து வருகிறது. எல்லை தாண்டி குடும்பப் பழக்கங்கள் வேரூன்றவில்லை.8) வெள்ளிக்கிழமையில் ஜூம்மா குத்துபா முடிந்த பின்பு நோயுற்றவர்களுக்கு, இறந்தவர்களுக்கு துவா செய்யவும், மருத்துவச் செலவு, ரத்தம் தேவைப்படும் நோயாளிக்கு உதவவும் வேண்டுகோள் விடப்படுகிறது. அங்கு இறந்தவர்களை அடக்ம் செய்யும் இடம் மிகவும் விலை அதிகமாக இருக்கிறது. வசதியில்லாது இறந்தவரகளுக்கு அடக்கம் செய்ய கம்யூனிட்டிகள் வசூல் செய்து அடக்கம் செய்கிறார்கள்.9) பெண்கள் நீண்ட கையுள்ள சட்டையினை அணிந்தும் மேலங்கி, தலை முக்காடும் அணிந்தும் காணப்படுகின்றனர். ஆனால் சில ஆண்கள் தான் சமூதாயம் கூடும் இடங்களுக்கு முனங்காலுக்கு மேலுள்ள அரைக்கால் சட்டையணிந்து வருகின்றனர். அதுவும் பெண்கள் கூடும் இடங்களுக்கு வருவது அந்த இளைஞர்களுக்கு மேலை நாகரிகமாக இருக்கலாம் ஆனால் என்னால் முகம் சுழிக்காமல் இருக்க முடியவில்லை. தமிழக முஸ்லிம் ஊர்களிலிருந்த முஸ்லிம் பட்டதாரிகள் ஊரில் கைலியும் தொப்பியும் அணிந்து விட்டு, அமெரிக்காவின் நகரங்களில் நாகரீகமென்று அரைக்கால் சட்டையினை அணிந்து வருவது அவ்வளவு இஸ்லாமிய பண்பாடுக்கு உகந்ததாக கருத முடியவில்லை. 10) சிறார்கள் அமெரிக்காவின் மேதாவி கலாச்சாரத்தில் ஈடுபடாமல் தங்கள் மதக்கோட்பாடோடு வாழ பெண்கள் பார்த்துக் கொள்கிறார்கள்.11) இஸ்லாமியர் கருத்துச்சுதந்திரத்துடன் வழிபாடு நடத்த பல இஸ்லாமிய நாடுகளில் கூட இல்லாதிருந்தும் அமெரிக்காவில் இருக்கிறது பாராட்டத்தக்கது.12) இந்திய முஸ்லிம் கூட்டமைப்பு, தமிழ் முஸ்லிம் கூட்டமைப்பு போன்ற அமைப்புகள் சமூதாய தொண்டுகளும் மற்றும் இனையதளங்களும் நடத்தி வருகின்றன.
4) மேற்கத்தியவர் பார்வையில் இஸ்லாமியர:; 1989ஆம் ஆண்டு ஈரானியர் புரட்சிப்படை அமெரிக்காவின் தூரகத்தினைக் கைப்பற்றி அமெரிக்கர்களை பயணக்கைதிகளாக வைத்த பின்னரும், அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 11.9..2001 ஆம் ஆண்டு தகர்க்கப்பட்ட பின்பும், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாட்டோ நாடுகளின் கோபம் உலக முஸ்லிம்கள் மீது திரும்பியுள்ளது என்றால் அது மிகையாகாது. அந்த இரண்டு நிகழ்ச்சிகளுமே இஸ்லாமியர் வன்முறையாளர்கள் என்ற மாயைத்தோற்றத்தினை உருவாக்கி உள்ளது. அதன் விளைவு தான் அந்த நாடுகள் ஆப்பானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளில் படையெடுக்கத்தூண்டியதோடு மட்டுமல்லாமல், பாகிஸ்தானையும், ஈரானையும் பயமுறுத்தும் பம்மாத்துக்களில் ஈடுபட்டு வருகின்றனர். அது மட்டுமா? பிரான்ஸ், ஹாலந்து, நிய+ஜிலாந்து, இட்டாலி போன்ற நாடுகளில் பெண்கள் ஹிஜாப் அணிந்து வரவும், புர்கா போடவும் மறுக்கப்படுகிறது. ஆனால் கிறித்துவ இளைஞர்களும், பெண்களும் குளிர் காலத்தில் தலை மூடிய ‘ஹ_ட்’ கவச உடை அணிய அனுமதியள்ளது எவ்வாறு நியாயமாகும்? ஏன் இந்தியாவில் கூட முஸ்லிம் அல்லாத பெண்கள் வட மாநிலங்களிலும் முக்காடு போட்டும், இரு சக்கர வாகனத்தில் போகும் போது முகத்தினை மூடி செல்வதில்லையா? ஏன் இஸ்லாமியரை மட்டும் தனிமைப் படுத்துகிறார்கள் என்பது ஆச்சரியமே! அமெரிக்காவின் இரட்டைக்கோபுர தகர்ப்பிற்கு பின்பு உலக முஸ்லிம்களைப் பற்றி தவறான தகவல்கள் எலக்ட்ரானிக் மீடியாவிலும், பத்திரிக்கைகளிலும் வராமலில்லை. பொதுவாக இஸ்லாமியர் வன்முறையாளர் என்ற கருத்தினை புகுத்தப் பார்க்கின்றனர். அதே வேளையில் அமெரிக்காவின் ஓக்லாமா சிட்டியில் ஃபெடரல் அரசு கட்டிடத்தினை குண்டு வைத்து தகர்த்த டிமோட்டி என்ற அமெரிக்கன் கிறித்துவ மதத்தினன் என்பதால் எல்லா கிறித்துவரும் தீவிரவாதிகள் என்று யாரும் சித்தரிக்க மாட்டார்கள். ஆனால் முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகள் என்று சாயம் பூசப்பார்;க்கிறார்கள். அவர்களெல்லாம் இஸ்லாம் அமைதியினைப் பேணிக்காக்கும் மதம் என்று அறியாதவர்கள். இஸ்லாம் மதமும், கிறித்துவ மதமும் சகோதர மதம். ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது சொல்லிக் கொள்ளும் முகமனான ‘அஸ்ஸலாமு அலைக்கும்’ என்பதே உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாகுக என்று சொல்லப்படுவதே என்று அறியாதவர்கள். இஸ்லாமியர் மக்கள் ஒற்றுமைக்காகவும் ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்பும் முக்கிய கடமையாக கொள்பவர்கள். அதே தத்துவத்தினைத்தானே ரசூலல்லாஹ் மட்டுமல்லாமல் அவர்களுக்கு முன்பு வந்த கிறித்துவ, யூத மதத்தின் கடவுள்களாக கருதப்படும் அப்ரஹாமும், மோசசும், ஜீசசும் போதித்தனர். அவர்களெல்லாம் ரசூலல்லாஹ்வின் முன்னோடி நபிமார்கள் என்று குர்ஆனில் சொல்லப்பட்டதினை அவர்கள் அறியாதவர்களா?பொதுவாக இரண்டாவது உலகப்போருக்குப் பின்னர் கூட்டுப்படை வெற்றி பெற்ற பின்னரும் முன்னாள் காலணி ஆகிக்கத்தினால் விடுபட்ட நாடுகளில், அல்லது இஸ்ரேயில் போன்று திணிக்கப்பட்ட நாடுகளில் உள்ள ஆட்சிக்கு ஆதரவாக அமெரிக்க-ஆங்கிலேய கூட்டுப்படை ஆதரவு அளித்து வருகிறது. அந்த திணிக்கப்பட்ட நாடுகளின் எல்லைகளை ஏற்காத நாடுகளில் வசிக்கும் எதிர்ப்பாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். அப்படி எதிர்ப்பு காட்டுபவர்களில் பெரும்பாலும் முஸ்லிம்களாக இருப்பதால் கூட்டுப்படை தன் நவீன ஆயுத பலத்தினைக் காட்டி தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து மறு காலணி ஆதிக்கத்திற்கு வழிவகுக்கிறது என்றால் மிகையாகாது. இதனை நான் சொல்லவில்லை அமெரிக்கா-கூட்டுப்டை எதிர்ப்பாளரான அமெரிக்க அறிஞர் நோம் சோம்கி சொல்கிறார் என் 7.8.2010 தேகியிட்ட ஹிந்துப ;பத்திரிக்கை தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது. இதனால் மேற்கத்திய நாடுகள் என்ன நினைக்கின்றனரென்றால் உலகத்தில் அவர்களைத் தவிர உயர்ந்த இனமில்லை என்றுதானே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அமெரிக்கா 1776 ஆம் ஆண்டு விடுதலை பெற்றபோது பிரகடனப்படுத்திய குடிமக்களின் உயிருக்கும், உடமைக்கும், வழிபாடுக்கும் உத்திரவாதம் இஸ்லாமும் போதிக்கதானே செய்கிறது. இஸ்லாமிய-இந்து மக்கள் சண்டைகள் பற்றி ஆராய்ச்சி செய்த பேராசிரியர் அஷ்டுஸ் வார்ஷ்னே, இரு கமூகத்தினர் சண்டைகளைக் களைந்து சமரசம் ஏற்பட அரசியல் கட்சிகள், வியாபாரிகள் சங்கத்தினர், தொழிற்சங்கத்தினர், அறிவு ஜீவிகள், பத்திரிக்கையாளர்கள், சினிமாத்துறையினர், விளையாட்டு சங்கத்தினர் முன்வந்து அதற்கான வழிவகை செய்யவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆகவே முஸ்லிம் மக்களின் மேற்கத்திய நாடுகளின் ஆதிக்க உணர்விற்கு எதிரான கசப்பினைப் போக்கி நல்லெண்ணம் உண்டாக்க வேண்டுமென்றால் கீழ்கண்ட வழிமுறைகளை அவர்கள் மேற்கொள்ள வேண்டும்:1) முஸ்லிம் நாடுகளின் வறுமையினை ஒழித்து அந்த நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு தன்னிறைவு பெற உதவ வேண்டும்.2) முஸ்லிம் நாடுகளின் இறையான்மைக்கு உத்திரவாதம் தர வேண்டும்.3) முஸ்லிம் மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு வழிவகுக்கும் பாலஸ்தீனத்தில் அமைதி ஏற்பட உடனே முழு ஒத்துழைத்து அதனை நிலை நாட்டவேண்டும்.4) மதசம்பந்தமான போதனைகளை மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் மதரஸாக்களில் கல்வியினை கற்றுக் கொடுக்க கல்விக்கான உதவித் தொகையினை பின் தங்கிய முஸ்லிம் நாடுகளுக்குத் தரவேண்டும்.5) நான் மேற்கூறிய யோசனைகளுக்கு அமெரிக்க முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் முதலில் அமெரிக்காவில் வாழும் முஸ்லிம் என்ற நிலை மாறி அமெரிக்கா முஸ்லிம்களாக மாறி அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடு மக்களினன் தவறான எண்ணத்தினை மாற்ற கீழ்கண்ட வழிகளில் செயலாற்ற வேண்டும்:.1) அமெரிக்கா முஸ்லிம்களில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்;து வந்து குடியுரிமை பெற்றவர்கள். 40 சதவீதம் அமெரிக்கா-ஆப்பிரிக்கா இனத்தினர். இவர்கள் அனைவரும் அமெரிக்காவில் வாழும் கிறித்துவர்கள்-யூதர்களுடன் நல்ல உறவினை ஏற்படுத்தி அமெரிக்கா அல்லாத முஸ்லிம் நாடுகளுடன் நல்லுறவினை நிலைநிறுத்தும் பாலமாக அமைய வேண்டும்.2) அமெரிக்காவின் யூதர்கள் என்ன செய்ய வேண்டும்? பாலஸ்தீன மக்கள் அமைதியுடனும், சொந்த நாடு, உரிமை, மற்றும் உடல், பொருள் உத்திரவாதத்துடன் வாழ முயற்சி எடுக்க வேண்டும்.. ஏனென்றால் எந்த வன்முறையும் இஸ்ரேயில் நாட்டினை விடுவிக்க முடியாது. அதேபோல பாலஸ்தீனர்களை தங்கள் சொந்த இடத்திலிருந்து வலுக்கட்டாயமாக நிறந்திறமாக வெளியேற்றவும் முடியாது. ஆகவே இஸ்ரேயிலும், பாலஸ்தீன மக்களும் தன்னுரிமையுடன் வாழ அமெரிக்கா வாழும் கிறித்துவர்களும், யூதர்களும் வழிவகுக்க வேண்டும். அதற்கான முயற்சியினை அமெரிக்காவின் முஸ்லிம்கள் எடுக்க வேண்டும். அமெரிக்காவில் ஒரு பழமொழி சொல்வார்கள், நீங்கள் சிரியுங்கள், அடுத்தவரும் சிரிப்பார்’. அந்த பழமொழியே யூத மக்களுக்கும் பொருந்தும். 3) அமெரிக்காவின் பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சினிமாத்துறையினர் அமெரிக்கா படைகள் முஸ்லிம் நாடுகளில் தற்காலிக வெற்றியினை பிரதானப்படுத்தாது, எப்படி ஆப்பிரிக்கா மக்களை ‘டார்ஜன்’; படத்தின் மூலம் காட்டுமிராண்டிகள் போல எழுத்திலோ அல்லது எலக்ட்ரானிக் மீடியாவிலோ, அல்லது அமெரிக்கா கூட்டுப்படையின் தங்கள் நவீன போர் எந்திரங்கள் மூலம் எப்படி ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் வெற்றி கொண்டு முஸ்லிம்களை கோழையாக சித்தரிக்காது அவர்களும் தாங்கள் வாழும் கிரகத்தில் பிறந்த மனித பிறவிகள் தான் அவர்களுக்கும் கவுரவமாக, அமெரிக்காவின் 1776 ஆம் ஆண்டு சுதந்திர பிரகடனத்தில் கூறப்பட்டது போல சுதந்திரமாக வாழ அனைத்து உரிமைகளும் உண்டு என்பதினை உணர்ந்து செயலாற்ற வேண்டும். அவ்வாறு செயலாற்றினால் நிச்சயாக முஸ்லிம் மக்களின் வெந்த புண்ணிற்கு மருந்து போட்டது போல ஆதரவாக இருக்குமல்லவா? அதற்கான கருத்து ஒற்றுமையினை அமெரிக்க முஸ்லிம் ஏற்படுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

Wednesday, August 4, 2010

வாழ்வின் வசந்தமே வருக

ரமலான் மாதம் பிறந்து விட்டால் சுவனத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன, நரகத்தின் வாயில்கள் முடப்படுகின்றன, ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. (ஹதீஸ்)
இப்புனித மிக்க ரமலானில் இறைவன் நமக்காக உலகத்தின் நிலையயே மாற்றிவிட்டான், இது வானம், பூமியின் வசந்த காலமாக இருக்கிறது. எல்லாம் நமக்காக தயார்படுத்தபட்டுவிட்டன ஆனால் நாம் அதற்க்கு தயாராகிவிட்டோமா!!!
நாம் என்ன செய்ய வேண்டும், இதோ சில வழி முறைகள்:
1. இந்த ரமலானில் முழு நன்மைகளையும் பரிபூரணமான முறையில் அடைந்து கொள்வதற்க்கு இறைவனிடம் துஆ செய்வது இதை இன்று முதல் துவங்குவது.
2. நமக்கு நாமே ஒரு உறுதி மொழி எடுப்பது ரமலானில் அனைத்துவிதமான பாவங்களை விட்டும் தவிர்ந்திருப்பேன். (உதாரணமாக: கண், காது, கை, கால்)
3. அதிகமாக நம் ஓய்வு நேரங்களை இறைவழிப்பாட்டில் கழிப்பதற்க்கு முயற்சிப்பது.
4. அத்திவாசியமற்ற வேலைகளை ரமலானுக்கு முன் அல்லது பின் மாற்றிக்கொள்வது. உதாரணமாக ரமலானுக்கா செய்யக்கூடிய ஷாப்பிங் மற்றும் துணி எடுப்பது போன்றவற்றை முன்னமே முடித்து விட்டு இபாதத்துக்காக முழுமையாக நம்மை தயாராக்கிக் கொள்வது.
5. 24 மணி நேரங்களையும் ஸுன்னத்தான வாழ்க்கைக்கு ( நாயகம் ஸல் அவர்களின் முழு ஸூன்னாவைப் பேண) ஒரு வாய்ப்பாக இந்த ரமலானை ஆக்கிக்கொள்வது.
6. நோன்பு சம்மந்தப்பட்ட பிக்ஹ் சட்டங்களை ரமலானுக்கு முன்னே அறிந்து கொள்வது (பேஸ்ட் உபயோகிப்பது, அத்தர் பயன்படுத்துவது, ஊசி போடுவது)
7. ஆபிஸிலும், டிரைவிங்கில் பொதுவாக ஓய்வாக இருக்கும் போது அதிகமாக ஸலவாத் ஒதிக்கொள்வது.
8. குறைந்த பட்சம் ஒரு நாளைக்கு ஒரு ஜூஸ்வு அல்லது 3 ஜூஸ்வு குர் ஆனில் இருந்து ஓதுவது என்று வழமைப்படுத்திக்கொள்வது. இந்த ரமலானில் ஒன்று / மூன்று குர் ஆன் முழுமையாக ஓதி முடிப்பதற்ககு முயற்சிப்பது. 9. அதிகமாக நற்பண்புகளை வளர்த்துக்கொளவது, (அதற்க்கு எதிரான கோபத்தை முழுமையாக விடுவது, புறம்பேசுவதை தவிர்ப்பது, பொய்யை தவிர்ப்பது). யார் மீதாவது கோபமாக இருந்தால் இந்த ரமலானில் அவரை மன்னித்து அவரோடு உறவை தொடர்வது.
10. முடிந்த அளவு டிவி பார்பதை தவிர்ப்பது ( நியூஸ் கேட்பதையும் சேர்த்து) 11. இப்தார் மற்றும் ஸஹர் நேரங்களில் ஹலாலான உணவை எடுப்பது ( முடிந்த அளவு நம் சொந்த வருமானத்தில் இருந்து ஆக்குவது) ஹராமான உணவை விட்டு முழுமையாக் தவிர்ந்திருப்பது.
12. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வரலாற்றை முழுமையாக ஒரு தடவை இந்த ரமலானில் படித்து முடிப்பது.
13. தொழுகைகளை ஜமாத்தோடும், முன் பின் ஸுன்னத்தோடும் நிறைவேற்றுவது.
14. நபிலான இபாதத்தில் ஈடுபடுவ‌து ம‌ட்டும‌ல்லாம‌ல், ப(F)ர்ளான, வாஜிபான விஷயங்களில் மிக கவனமாக இருப்பது. (குடும்பத்தை கவனிப்பது, ஆபிஸ் வேலைகளில் கவனமாக இருப்பது வாஜிபாகும்.)

Thursday, June 10, 2010

அல்குர்ஆன் கூறும் சூராவளிக் காற்று பற்றிய எச்சரிக்கை

உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)
இங்கு நாம் சிந்திக்க கூடிய அறிவியல் உண்மை என்ன? என்பதையும் சூராவளிகளின் வகைகளையும் அவற்றின் வேகத்தையும் பற்றி ஆராய்ந்து பார்ப்போம் வாருங்கள்!
சூராவளி என்பது என்ன?
சூராவளி என்பது ஒருவகை சுழலும் காற்றாகும். இந்த காற்றின் கட்டுக்கடங்காத வேகத்தில் சுழன்றபடியே மேகங்களை தொட்டுக் கொண்டு நிலப்பரப்பை சூரையாடி பயிர்களையும், வீடுகளையும் நாசம் செய்துவிடும் ஆற்றல் கொண்டவைகளாகும். சூராவளி என்பது ஒரு புனல் (Funnel) வடிவத்தில் காணப்படும் பயங்கரமான சூராவளியின் மேற்பகுதி மேகத்தை தொட்டு கிணறு போன்ற அகன்று காணப்படும் மேலும் இதன் வால் பகுதி கூர்மையான வாள் போன்று வலைந்து காணப்படும். இவற்றிற்கு ஆங்கில்தில் டொர்னடோ (Tornado) என்று பெயர்.
சூராவளியின் வேகம்
பல்வேறு சூராவளிகள் குறைந்த பட்ச வேகமாக மணிக்கு 40 மைல்கள் என்ற வேகத்தில் சுழன்றடிக்கும் (அதாவது 64 கி.மீ வேகம்) மற்றும் அதிக பட்சமாக மணிக்கு 110 மைல்கள் என்ற வேகத்தில் சூழன்றடிக்கும் (அதாவது மணிக்கு 177 கி.மீ வேகம்) இந்த வேகம் சுமார் 250 அடி (75 மீட்டர்) நிலப்பரப்பை ஒரு வினாடியில் தாக்கும் வல்லமை படைத்தது.
சூராவளிகள் சுழல ஆரம்பிக்கும் போது எதிர்பாராத விதமாக காற்றின் வேகம் 300 மைல்களாக இருந்தால் இந்த சூராவளிகள் குறைந்தபட்சடம் 1 மைல் (அதாவது 1.6 கி.மீ) பரப்பளவு கொண்ட நிலப்பரப்பை ஒரு வினாடியில் துவம்சம் செய்து அப்படியே மெல்ல நகர்ந்து பல மைல்கள் நகர ஆரம்பிக்கும். இவைகள்தான் சூராவளிகள் அதாவது வானத்தின் சுனாமி என்று கூட கூறலாம்.
சூராவளி – டொர்னடோ எவ்வாறு உருவாகிறது
ஒரு குறிப்பிடட திசையிலிருந்து வீசக்கூடிய குளிர்ந்த காற்று மற்றும் வரண்ட காற்றும் அதன் எதிர்திசையிலிருந்து வீசக்கூடிய சூடான காற்று மற்றும் ஈரப்பதமான காற்றுடன் மோதுகிறது. இப்படிப்பட்ட பல்வேறு வகையான காற்றுகள் ஒன்றுடன் ஒன்று மோதும்போது அதிலிருந்து ஒரு வெளிப்படும் விசையே சூராவளி எனப்படுகிறது. இந்த மோதல்கள் அதிகமான அளவு நடைபெறும் போது அந்த சூராவளிக்கு பலம் கூடுகிறது. இதற்கு பெயர்தான் டொர்னடோ எனப்படுகிறது.
இந்த சூராவளி காற்றின் அறிகுறிகள் என்ன?
டொர்னடோ என்ற பயங்கரமான சூராவளி வீசுவதற்கு முன்னர் ஆலங்கட்டி மழைகள் ஏற்படுமாம் அந்த ஆலங்கட்டியின் தாக்கம் வீடுகளின் கூரைகளை துவம்சம் செய்துவிடுமாம்.
இந்த சூராவளி காற்றின் வேகம் என்ன?
வானத்தில் ஒரு பயங்கரமான சூராவளி உருவாகிவிட்டால் அந்த சூராவளி நிலத்தை தொடுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் வெறும் 12-13 நிமிடங்கள் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 13ம் வினாடியிலிருந்து இந்த சூராவளி நிலத்தை பதம் பார்த்து அக்குவேறு ஆணிவேராக பிடிங்கி அதை தனக்குள் வசப்படுத்திக்கொண்டு அதே வேகத்தில் நகர ஆரம்பிக்குமாம்.
இந்த சூராவளி காற்றின் சக்தி எத்தகையது?
மனிதர்கள், கால்நடைகள் கூட இந்த சூராவளியில் சிக்கி வீசப்படுகிறது. சாலையில் நிருத்தப்பட்டிருக்கும் வாகனங்கள் தூக்கி வீசப்பட்டு வீட்டின் கூரைகளின் மேல் நிற்குமாம் அவ்வளவு பயங்கரமானது இந்த அதிபயங்கர சூராவளிகள்.

சூராவளியின் வகைகள் பார்ப்போம்


SUPERCELL TORNADOES (சூராவளி மேகங்களுடன்)


இந்த வகை சூராவளிகள் SUPERCELL TORNADOES என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை சூராவளி மேகங்களை கருவாக கொண்டு சூழன்றடிக்கும். ஒரு பக்கம் மேகங்கள் மழைச்சாரல்களை வீசிக்கொண்டும் மற்றொரு பக்கம் சூரைக் காற்றை சூழன்றபடியும் வீசி பல கிலோமீட்டர்களை நாசம் செய்யக்கூடிய ஆற்றல் பெற்றிருக்கும். இந்த வகை சூராவளிகள் ஒரு நிலத்தை தொட்டுவிட்டால் அதன் வேகம் 200 கி.மீ.க்கும் குறைவாக இருக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

LANDSPOUT (லேன்ட் ஸ்பவ்ட்)


நிலத்தில் உள்ள மணல் மேடுகளை பதம்பார்த்து மணலை வீசியவண்ணம் சூழன்றடிக்கும் இந்த கொடிய சூராவளிக்கு லேன்ட் ஸ்பவ்ட் என்று பெயர். இது முதலில் கண்ட SUPERCELL TORNADOES-களுக்கு அடுத்தபடியாக வீசக்கூடிய சூராவளியாகும். இவைகள் கனத்த மேகங்களை இழுத்துக்கொண்டு சுழலாமல் பலவீனமான மேகங்களைக் கொண்டு காற்றை சுழன்றடிக்கும் ஆற்றலை பெற்றிருக்கிறது.

GUSTNADO (கஸ்டனாடோ சூராவளி)


இந்த GUSTNADO என்றழைக்கப்படும் சூராவளி பலவீனமானதாகும். இவைகள் சற்று வேகம் குறைந்ததாகவும் விரைவில் நின்றுவிடக் கூடியதாகவும் காணப்படும். இந்த சூரைக்காற்றினால் தூசுப்படலம் சற்று அதிகமாக காணப்படும். இந்த வகை சூராவளிகளுக்கு மேகங்களுடன் நெருங்கய தொடர்பிருக்காது மாறாக காற்றின் வேகம்தான் இவைகளையும் உருவாக்குகிறது.

WATERSPOUT (நீரில் ஏற்படும் சூராவளி)


வாட்டர் ஸ்பவ்ட் எனப்படும் இந்த சூராவளிகள் நீர்நிலைகளில் ஏற்படக்கூடிய சூராவளிகளாகும். இவைகள் நிலத்தில் வீசக்கூடிய SUPERCELL எனப்படும் அதிபயங்கர சூராவளிகளின் வடிவ மேயாகும் ஆனால் இவைகள் நீரில் சூழன்றடிப்பதால் இதனால் ஏற்படும் பாதிப்பகள் மனிதனுக்கு மிக குறைவுதான். இந்த சூராவளிகள் நிலத்தை தொடுவதற்குள் அதன் சக்தியை இழந்து விடுகின்றன.

DUST டெவில்ஸ்


இந்த வகை சூராவளிகளுக்க டஸ்ட் டெவில் என்று பெயர் அதாவது தூசுகளின் சாத்தான். இந்த சூராவளி அதிகமாக பாலைவனங்களில் வீசுவதுதான் வழக்கம். இவைகள் உச்சி வெயில் மற்றும் மதிய நேரங்களில் அதிகமாக வீசுகின்றன. இவைகள் மணிக்கு 70 மைல்கள் வேகத்தில் சுழன்றடிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றன. இவைகள் மிகவும் பலவீனமான சூராவளிகளாகும் இவைகளுக்கு மேகங்களுடன் எந்த தொடர்பும் காணப்படாது மாறாக காற்றின் அழுத்தம் இவ்வகை சூரைக் காற்றை வீசிக்கொண்டு சில நிமிடங்களில் தன் சக்தியை இழந்துவிகின்றன. தூசுப்படலத்தை தட்டிச் செல்வதால் கண்களுக்கு மிகவும் பாதிப்புகள் ஏற்படுத்துகின்றன. சற்று அதிகமாக வீசினால் ஒரு வாகத்தை தலை குப்புற கவிழ்த்துவிடும் ஆற்றல் பெற்றிருக்கும்.
FIRE WHIRLS
நெருப்புச் சுறாவளிகள் அதாவது சூராவளி சூழலும் போது அதன் உராய்வினால் காய்ந்த இழை தழைகள் கருகி நெருப்பு உண்டாகிறது இந்த நெருப்புச் ஜுவாலைகளை சூராவளி தன்னுள் இழுத்தபடியே பிற இடங்களுக்கு பரவி நாசத்தை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றுள்ளன. இவைகள் பெரும்பாலும் விவசாய நிலங்கள் மற்றும் காடுகள் உள்ள பகுதிகளில் பேரிழப்பை ஏற்படுத்திவிடுகின்றன.

இந்த நெருப்புச் சூராவளிகள் 1923ம் ஆண்டு ஜப்பான் நாட்டில் உள்ள டோக்கியோவின் Hifukusho-Ato என்ற கிராமத்தில் சுமார் 38,000த்திற்கும் மேற்பட்ட மனிதர்களை வெரும் 15 நிமிட இடைவெளியில் நெருப்பினால் பொசுக்கி அழித்துள்ளது. இவைகள் பெரும்பாலும் 10 முதல் 50 மீட்டர் அகல உயரமும் 10 அடி அகலம் கொண்டதாகவும் காணப்படும். இச்சுறாவளிகள் சூழன்றடிக்கும் போது காற்றின் வேகம் மணிக்கு 160 கீ.மீ என்ற வேகத்தில் காணப்படும். 49 அடி உயரமுள்ள மரத்தை கூட சில வினாடிகளில் அழித்துவிடும்.
அல்லாஹ் அருள்மறையில் விவரிக்கும் சூராவளியின் தாக்கம் பற்றி:
உங்களில் யாராவது ஒருவர் இதை விரும்புவாரா? - அதாவது அவரிடம் பேரீச்ச மரங்களும், திராட்சைக் கொடிகளும் கொண்ட ஒரு தோட்டம் இருக்கிறது. அதன் கீழே நீரோடைகள் (ஒலித்து) ஓடுகின்றன. அதில் அவருக்கு எல்லா வகையான கனி வர்க்கங்களும் உள்ளன. (அப்பொழுது) அவருக்கு வயோதிகம் வந்துவிடுகிறது. அவருக்கு (வலுவில்லாத,) பலஹீனமான சிறு குழந்தைகள் தாம் இருக்கின்றன - இந்நிலையில் நெருப்புடன் கூடிய ஒரு சூறாவளிக் காற்று, அ(ந்தத் தோட்டத்)தை எரித்து(ச் சாம்பலாக்கி) விடுகின்றது. (இதையவர் விரும்புவாரா?) நீங்கள் சிந்தனை செய்யும் பொருட்டு அல்லாஹ் (தன்) அத்தாட்சிகளை உங்களுக்குத் தெளிவாக விளக்குகின்றான் (அல்குர்ஆன் 2:266)
(அவ்வூர்வாசிகள் இரவில் நித்திரை செய்து கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களை வந்து அடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? (97) அல்லது அவ்வூர் வாசிகள் (கவலையில்லாது) பகலில் விளையாடிக்கொண்டிருக்கும் போதே, நமது வேதனை அவர்களையடையாது என பயமில்லாமல் இருக்கின்றார்களா? (98)அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சம் தீர்ந்து விட்டார்களா? நஷ்ட வாளிகளான மக்களை தவிர, வேறு எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அச்சம் தீர்ந்து இருக்க மாட்டார்கள்.) (09.97/99)

……”நீங்கள் நன்மையிலும், இறையச்சத்திலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளுங்கள், பாவத்திலும் வரம்பு மீறலிலும் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள் அவன் கடுமையாக தண்டிப்பவன் (சூறா மாயிதா,02)

وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ ۖ وَلَاتَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ ۚ وَاتَّقُوا اللَّـهَ ۖ إِنَّ اللَّـهَ شَدِيدُ الْعِقَابِ
……and help one another in goodness and piety, and do not help one another in sin and aggression; and be careful of (your duty to) Allah; surely Allah is severe in requiting
(Al-Maaida-2)


க‌ச‌ப்பான‌ உண்மைக‌ள்

"க‌ச‌ப்பாக‌ இருப்பினும்,பிறர் அதிருப்தியிற்றாலும் உண்மையே பேசுங்க‌ள்"
ஆனாலும்.....


மனிதர்கள் பெரும்பாலும் சுயநலவாதிகளாக இருப்பர், நியாயமின்றி நடப்பர்
ஆனாலும் அவர்களை மன்னியுங்கள்

நீங்கள் வெற்றியடையும்போது, சில பொய்யான நண்பர்களையும்
உண்மையான எதிரிகளையும் சம்பாதிப்பீர்கள்
ஆனாலும் வெற்றிக்காகப் போராடுங்கள்

நீங்கள் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருந்தால்,
மனிதர்கள் உங்களை ஏமாற்றலாம்
ஆனாலும் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் இருங்கள்

நீங்கள் பல வருடங்கள் சிரமப்பட்டுக் கட்டியதை,
ஒருவர் ஒரே நொடியில் அழித்து விடலாம்
ஆனாலும் முயற்சியைக் கைவிடாதீர்கள்

நீங்கள் மகிழ்ச்சியுடனும் நிம்மதியுடனும் இருந்தால்,
மனிதர்கள் உங்கள்மீது பொறாமை கொள்ளலாம்
ஆனாலும் மகிழ்ச்சியாய் இருங்கள்

நீங்கள் பிறர் முன்னேற ஏணியாய் இருங்கள்,
ஏறியபின் அவர்கள் உங்களை எட்டி உதைக்கலாம்
ஆனாலும் பிறருக்கு ஏணியாய் இருந்து உதவுங்கள்

நீங்கள் ஒருவருக்குக் கடன் கொடுத்து உதவும்போது,
அதை அவர் திரும்பக் கொடுக்காமலே போகலாம்
ஆனாலும் சிரமத்திலிருப்பவர்களுக்கு கடன் கொடுத்து உதவுங்கள்

நீங்கள் இன்று செய்த உதவியை,
மனிதர்கள் நாளை மறந்துவிடலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள்

உங்களிடம் இருப்பதில் சிறந்ததை மற்றவர்களுக்கு அளியுங்கள்,
அது எப்போதும் போதாமலே போகலாம்
ஆனாலும் மற்றவர்களுக்கு சிறந்ததையே அளியுங்கள்

கடைசியில் பாருங்கள்,
எல்லாமே உங்களுக்கும் இறைவனுக்கும் இடையில்தான்
உங்களுக்கும் அவர்களுக்கும் இடையில் அல்ல..!

நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா?
(புனித குர்ஆன் 55:60)

Monday, May 31, 2010

பொய் ஜெவின் பொருளாதாரச் சுரண்டல் !

sengiskhan on Friday, May 28, 2010

பொது வாழ்வில் உள்ளவர்கள் தங்கள் குடும்பத்தினரை கட்சியிலோ பதவிகளிலோ புகுத்தினால் அதை வாரிசு அரசியல் என வசைபாடுவோர். ஏகத்துவம் பேசி மக்களை சுரண்டும் மனிதர்களை மறந்து விடுகின்றனர். மன்னித்து மறந்து விடுகின்றனர்.
பணத்தாசை இல்லாத பரிசுத்தவானாக, அப்பழுக்கில்லாத, அறிஞராக எளிமையை விரும்பும் ஏழையாக புகழை விரும்பாத புண்ணியாத்மாவாக வெளியே காட்டிக் கொள்ளும் இவர் உண்மையில் இதற்கு நேர் எதிரானவர். அபு அப்துல்லாஹ் கூறுவது போல் எதை வேண்டாம் என்கிறாறோ அது வேண்டும் என்று அர்த்தம் பணத்தை வேண்டாம் என்பார் பாக்கெட்டில் வைத்து திணிக்க வேண்டும் என விரும்புவார். எளிமை வேஷம் போடுவார் புதிதாக சந்தைக்கு வரும் அனைத்து எலக்டானிக் கருவிகளும் (குறிப்பாக செல்போன், பேனா, மைக், கேமரா போன்ற புலனாய்வு சாதனங்கள்) இவருக்கு முதலில் கிடைத்துவிடும். எனக்கு ஏசி ரூம் வேண்டாம்மா என்று சொல்லி விட்டு பின்னாள் வரும் நிர்வாகியிடம் நாளைக்கு புரோக்ராம் நல்லா வரனும்னா அண்ணன் நிம்மதியா தூங்கனும் அவர் வேணான்னு தாம்பா சொல்வார் நாம தான் ஏற்பாடு செய்யனும் ! என்று சொல்ல சொல்வார். மேடைக்கு வரும் போது அடக்கமாக பின்னால் சென்று அமர்ந்து அனைவரது கவனத்தையும் தன் பக்கம் ஈர்ப்பார்.

இப்படித்தான் ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பதாக பாக்கர் உள்ளிட்ட பல நிர்வாகிகளை கூறுவார். ஆனால் உண்மையில் பார்த்தோம் என்றால் இந்த ஜமாஅத்தை வைத்து சம்பாதிப்பது இவரும் இவரது குடும்பத்தினரும் தான் ! கொள்கைச் சொந்தமே சொந்தம் குருதி சொந்தம் தேவையில்லை புறக்கணிப்போம் எனக் கூறி குடும்பங்களையெல்லாம் பிரித்த இந்த புண்ணியவான். அதை தன் குடும்ப விஷயத்தில் கடைப்பிடித்தாரா ? என்றால் இல்லவே இல்லை வெள்ளிக்கிழமை கூட தொழுகாத இவரது தம்பி காஜா இவர்தான் உணர்வின் விளம்பர ஏஜென்ஸியான பிடபில்யூபி ஏஜென்ஸியை நடத்துகிறார். இவரது பொறுப்பில் நடக்கும் உணர்வுக்கு திடிரென 5 லட்சம் கொடுங்கள் என கூறுவார் ஜமாஅத் - பணத்திலிருந்து கொடுக்கும் பொருளாளருக்கு கணக்கேதும் கிடைக்காது.

தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத இவரிடம் வரும் தவ்ஹீத் சகோதரர்களிடம் எப்படி பேசுவது என்ற மரியாதையும் தெரியாத மைத்துனர்கள் இவருக்கும் சூரியனையும் சந்திரனையும் வசப்படுத்தி கொடுத்தள்ளார். சன் பிரிண்டிங் ஏஜென்ஸியும், மூன் பப்ளிகேஷன் தான் ! அவைகள். இந்த சன் பிரிண்டிங் ஏஜென்ஸிதான் ஜமாஅத்தின் பெரும்பாலான பிரிண்டிங் வேலைகளை எடுக்கும் தேர்தல் வந்துவிட்டால் இவர்கள் பாடு கொண்டாட்டம் தான் ! ஏனென்றால் அரசியல் வாதிகளிடம் நேரடியாக காசு வாங்க மாட்டோம் செலவு செய்துவிட்டு பில் தருவோம் நீங்கள் கொடுத்து விடவேண்டும் என பேரம் பேசி பெருந்தொகையை பிரிண்டிங்க்கு கறந்து விடுவர். இப்படித்தான் கடந்த முறை பன்னீர் மூலம் ஜெ தந்த பல லட்சம் பணம் ஜெகவீ மூலமாக தேர்தல் பிரசார செலவாக காண்பிக்கப்பட்டது. இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு தேதி வேண்டும் என்றால் குண்டு வைத்தது யார் ? என்ற பிரசுரத்தை 3000 பிரிண்டிங் செய்ய வேண்டும் என்று நிர்பந்தம் செய்த கொடுமை எல்லாம் பெரிய குளம் சகோதரர்கள் நிகழ்ச்சி நடத்தியபோது வெளிப்பட்டது. பாக்கர் ஜமாஅத் பேரை பயன்படுத்தி சம்பாதிக்கிறார் என குய்யோ முறையோ என குதித்த ஹாமிம் இப்ராஹிம் ஜமாஅத் பெயரை பயன்படுத்தி இவரது மைத்துனர்கள் அப்பட்டமாக காலண்டர் போட்டு சம்பாதிக்கிறார்கள் என நாம் குற்றம் சாட்டிய போதும் பொதுச் செயலாளரே அது தவறு என்று ஒப்புக் கொண்ட பிறகும் கூட கண்டு கொள்ளவில்லை.

இது (சன்) சூரியத் தொல்லை என்றால், (மூன்) சந்திர தொல்லைக்கு எல்லேயே இல்லை ! மூன் பப்ளிகேசன் என்ற பெயரில் குர்ஆனில் அடிக்கும் கொள்ளயோ குடும்பக் கொள்ளை ! தமிழகத்தில் யாரும் வைக்காத விலை வைத்து குர்ஆனை 300 ரூபாய்க்கு விற்று வருடத்திற்கு 10,000 குர்ஆன் மற்ற வியாபாரங்களை எல்லாம் பார்த்து வாங்குங்கள் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகி என்பதற்காக வாங்கி விடாதீர்கள். என்று விளம்பரம் செய்யும் இவர்கள் மற்ற தர்ஜமாக்களை விட இவர் தர்ஜமாவின் தரம் குறைந்து இருக்கலாம் என விளம்பரம் செய்யாதது ஏன்? மற்ற வியாபாரங்களை பற்றி வந்த புகார்களை விட இவரது குர்ஆன் விலை குறித்து வந்த புகார் அதிகமல்லவா ! மற்ற வியாபாரத்தில் நடந்த தவறுகள் குறித்து வந்த புகாரைவிட தர்ஜமா தவறுகள் குறித்து உலக முழுவதும் உள்ள மார்க்க அறிஞர்களிடத்தில் இருந்து புகார் அதிகமல்லவா.
இதைபற்றிக்கேட்டால் பிர்தவ்ஸியை வைத்து கையை மடக்கி டிவியில் விளக்கம் வேறு ! உயர்தர பிரிண்டிங், உயர்தர பைண்டிங், என்று சப்பைக்கட்டு அதுவும் ஜமாஅத் காசை பயன்படுத்தி மக்கள் பயான் பார்க்கும் நேரத்தில். ரஹ்மத் டிரஸ்ட் புகாரி தமிழாக்கம் எவ்வளவு தெரியுமா? என்று வியாக்யானம் பேசுகின்றனர். ரஹ்மத் டிரஸ்ட் உண்மையில் பெரும் பணத்தை செலவழித்து டிரஸ்ட் வைத்து, அலுவலகம் வைத்து,மொழிபெயர்ப்பு குழு அமர்த்தி, அதில் பல மவ்லவிகளுக்கு சம்பளம் கொடுத்து, பணியார்கள் வைத்து, லட்சக்கணக்கில் விளம்பரம் செய்து தங்களின் தாய் தந்தையருக்கு நன்மை சேர்க்க பணத்தை இழக்கின்றனர். நீங்கள் உங்கள் குடும்பத்திற்கு பணம் சேர்க்க, ஜமாஅத் ஆலிம்களை இலவசமாக பயன்படுத்தி ஜமாஅத் பணியாளர்களையும், தாவா சென்டர் மாணவர்களையும் பயன்படுத்தியுள்ளீர்கள் யாருக்காவது சம்பளம் கொடுத்ததுண்டா ? சம்பளம் வேண்டாம் ! டிவியில் தினமும் வருகிறதே விளம்பரம் அதற்கு எப்போதாவது கொடுத்ததுண்டா ? சாதாரண கிளை நிகழ்ச்சி விளம்பரத்திற்கு நச்சரித்து காசு வாங்கும் தலைமை, குடும்ப கொள்ளை கூட்டத்திடம் காசு வாங்கிய துண்டா? 2005ல் இருந்து கணக்கு வழக்கை காட்ட துணிவுண்டா? ஜமாஅத்தின் அவ்வளவு வசதி வாய்ப்புகளையும் பயன்படுத்தி சுரண்டும் நீங்கள் ரஹ்மத் டிரஸ்ட்க்கு ஒப்பிட தகுதி உண்டா? இதில் மற்றவர்களை வழிகேட்டில் உள்ளவர் என சொல்கின்றீர்கள். கோவை குர்ஆன் அறக்கட்டளை 45,000 குர்ஆனை இதுவரை முஸ்லிம்மல்லாத நபர்களுக்கு இலவசமாக கொடுத்துள்ளது. ஆறே மாதத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் 5000 குர்ஆனை மாற்றுமதத்தவருக்கு இலவசமாக வழங்கியுள்ளது. தமிழகத்தின் பெரிய ஜமாஅத் என மார்தட்டும் நீங்கள் எத்தனை குர்ஆனை இலவசமாக கொடுத்துள்ளீர்கள் ? 50,000 குர்ஆனை இலவசமாக கொடுத்தவர்கள் வழிகேடர்கள். 50,000 குர்ஆனை ரூ.300க்கு விற்று லாபம் சம்பாதிக்கும் இவர்கள் நேர்வழி
பெற்றவர்களா? சிந்திக்க வேண்டாமா !

மைத்துனர்கள் கதை இதுவென்றால் மகன் கதை அதைவிட மோசம் ஒரு பெண்ணை காதலித்து அவளோடு கலந்துறவாடி, இவரை நம்பி இஸ்லாத்தை ஏற்ற பெண்னை அவளது தந்தையோடு ஜென்டில்மேன் அக்ரிமென்ட் போட்டு துரத்தியவர் அப்படிப்பட்ட மகனுக்கு ரிக்கார்டிங், எடிட்டிங் என ஜமாஅத்தை வைத்து சம்பாத்தியம். ரீசார்ஜ் கூட இவரது மூன் கடையில் தான். மாநில நிர்வாகிகளுக்கு ! மாதம் ஒன்றுக்கு எடிட்டிங் வகையில் இருந்த குடும்பத்திற்கு 30,000 போய்ச் சேருகிறது. சிடி போட்டு பாக்கர் சம்பாதித்தார் என குற்றம் சாட்டும் ஹாமிம் இப்ராஹிக்கு ரிக்கார்டிங்போட்ட குடும்பம் நினைவுக்கு வராதது ஏனோ ? இப்போது புதிய கடையில் வாடிக்கையாளரை கவர தந்தையே கடையில் நின்று வியாபாரம் செய்து கொண்டுள்ளார். (எதிர் கடைகாரர் இவர் ஏன் எந்த வக்துக்கும் தொழபோகவில்லை என நம்மிடம் கேட்கிறார்.)

ஆக மற்றவர்கள்ளை எல்லாம் “இப்ராஹிம் நபி வழியில் குருதிச் சொந்தங்களை புறக்கணிப்போம் ! எனச் சொல்லிவிட்டு இவர் மட்டும் தொழுகையில்லாத, ஒழுக்கமில்லாத, ஏன் கொள்கையில்லாத, சொந்தங்களை புறக்கணிக்காமல் இருப்பதோடு, அப்பாவி தவ்ஹீத் கொள்கைச் சொந்தங்களை கொள்ளை அடித்து குடும்ப ஆட்சி நடத்துகிறார். ஏஜென்ஸி, சிடி, புக்ஸ், குர்ஆன், எடிட்டிங் ரிக்கார்டிங், ரீசார்ஜ் பிரிண்டிங்க ஏகத்துவ சகோதர்களிடம் சுரண்டி கொழுக்கிறார். கருணாநிதியை விட கேவலமாக தன் குடும்பத்தில் உள்ள அனைவரையும் வைத்து ஜமாஅத்தை உறிஞ்சுகிறார். அப்பாவி தவ்ஹீத் சகோதரன் பார்த்தால் அண்ணன் சிடி, படித்தால் அண்ணன் புக், மாட்டினால் சன் காலண்டர், நோட்டிஸ் போட்டால் சன் பிரிண்டிங், மிட்டாய் வாங்கினால் மூன், ரீசார்ஜ் பண்ணினால் மூன் என கொண்டு போய் கொட்டி விட்டு இன்னும் நடுத்தெருவில் நிற்கிறான்! இதற்காகவா ஏகத்துவம் பேசினோம். இதற்காகவா தவ்ஹீத்தை வளர்த்தோம் ! இவருக்காகவா குடும்பத்தை பகைத்தோம். ஊரை பகைத்தோம். உறவை வெறுத்தோம். நினைத்தால் வேதனையாக இருக்கிறது. இது கேவலமாக இல்லையா அடிவாங்கி உதைவாங்கிய தியாகம் செய்தது எல்லாம் ஒரு குடும்பம் பிழைக்கவா ? வேறுயாராவது இப்படி இந்த ஜமாஅத்தில் குடும்பத்தோடு பிழைக்க ஜமாஅத் அனுமதிக்குமா? ஜமாஅத் நிர்வாகிகள் உண்மையிலேயே நியாய வான்களாக இருந்தால் இது குறித்து நடவடிக்கை எடுக்கட்டும் ! இல்லையேல் பரிசுத்தமான ஜமாஅத், என்றெல்லாம் கூறுவதை விட்டு பிஜே அன்டு கோ என பேரை மாற்றட்டும்.

முஸ்லிமாக முதலில் தொழட்டும் பிறகு முஸ்லிம்களை அழைக்கட்டும் 2

நாங்கள் தயார் நீங்கள் தயாரா ?

sengiskhan on Sunday, May 30, 2010

கீழக்கரை நசீரின் 50,000 எங்கே ? வல்லம் மாநாட்டு கணக்கில் பாண்டிச்சேரி ஜின்னா மற்றும் பொய்ஜே வகையில் விடுபட்ட 1 லட்சம் எங்கே ? தம்பி காஜாவிற்கு பொய்ஜே கொடுக்கச் சொன்னது 5 லட்சம் எங்கே ? கடந்த தேர்தலில் பன்னீர் மூலம் ஜெ கொடுத்து ஜெகவீ செலவழித்த தொகையில் மீதிப் பணம் எங்கே ? அப்போதைய பொருளாளர் தொண்டியப்பா மற்றும் எஸ்.எம். பாக்கருடன் அரசு தரப்பு ஆடிட்டர் மற்றும் இஸ்லாமிய இயக்க தலைவர்களுடன் பொது இடத்தித்திறகு நாங்கள் வர தயார். பொய்ஜே அன்டு கோ 5 வருட கணக்கு வழக்கை (உண்டியல் வரவு உட்பட) கொண்டுவரத்தயாரா ? எங்கள் ஜமாஅத் திறந்த புத்தகம் எப்போது வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் கணக்கை பார்க்கலாம் என்று கூறும் நீங்கள் தயாரா ?
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்..) செங்கிஸ்கான் ஆன்லைன் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது.

குனங்குடி ஹனிபாவை கண்டுகொள்ளாத காரணம் ?

sengiskhan on Sunday, May 30, 2010

சிறையிலிருக்கும் வரைக்கும் குனங்குடி ஹனிபாவை பற்றி பேசியும் எழுதியும் வந்தவர். அவர் வெளியே வந்ததும் கண்டுகொள்ளவே இல்லை ! ஏன் தெரியுமா ? தமுமுக தலைவர்களோடு பத்திரிக்கையாளர் சந்திப்பில் தன்னை தமுமுகவில் இணைத்துகொண்டவதும். எஸ்.எம். பாக்கருக்கு அளித்த பேட்டியில் தன் இளைய மகன் ஜாபரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தில் இணைத்து விட்டதும் தான் காரணம் நிலைமை இப்படியே போனால் தீவுத்திடலில் நடப்பது சமுதாயத்தால் “ ஒதுக்கப்பட்டோர் மாநாடாகத் தான் இருக்கும்.”